சித்திரை திருவிழா கோலாகலமாக தொடக்கம்

மதுரை: மதுரை அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா​வின் முதல் நாளான நேற்று சுந்​தர​ராஜப் பெரு​மாள் திருக்​கல்யாண மண்​டபத்​தில் எழுந்​தருளும் நிகழ்ச்சி​யுடன் தொடங்​கியது.

3-ம் நாளான நாளை (ஏப்.29) கள்​ளழகர் திருக்கோலத்​தில் தங்​கப் பல்லக்​கில் மதுரைக்கு புறப்​பா​டாகிறார். சித்திரைத் திரு​விழா​வின் முதல் நாளான நேற்று மாலை சுந்​தர​ராஜப் பெரு​மாள் தோளுக்​கினி​யானில் திருக்​கல்​யாண மண்​டபத்​தில் எழுந்​தருளி​னார்.

இரண்​டாம் நாளான (ஏப்​.28) இன்று மாலை​யிலும், மூன்​றாம் நாளான (ஏப்​.29) நாளை காலை​யிலும் திருக்​கல்​யாண மண்​டபத்​தில் எழுந்​தருள்​கிறார். அன்று மாலை கொண்​டப்ப நாயக்​கர் மண்​டபத்​தில் எழுந்​தருளிய பின், கள்​ளர் திருக்​கோலத்​தில் மதுரைக்கு புறப்​பா​டாகிறார்.

அதைத் தொடர்ந்து ஏப்​.30 காலை 5.30 மணி​யள​வில் மூன்​று ​மாவடி​யில் எதிர்​சேவை நடை​பெறும். வழிநெடுகிலும் மண்​டகப்​ படிகளில் எழுந்​தருளி, அன்​றிரவு தல்​லாகுளம் பிரசன்ன வெங்​க​டாசலபதி கோயி​லில் எழுந்​தருள்​கிறார்.

இரவு பெரு​மாள் திரு​மஞ்​சன​மாகி தங்​கக் குதிரை வாக​னத்​தில் சாத்​துப்​படி ஆகி,  வில்​லிபுத்தூர் ஆண்​டாள் சூடிய மாலைசூடி அருள்​பாலிக்​கிறார்.

மே1-ம் தேதி அதி​காலை 2.30 மணி​யள​வில் கருப்​பண்​ண​சாமி கோயில் முன்பு ஆயிரம் பொன்​சப்​பரத்​தில் எழுந்​தருள்​கிறார்.

அதைத் தொடர்ந்​து, அதி​காலை 5.35-க்கு மேல் 5.55 மணிக்​குள் வைகை ஆற்​றில் தங்​கக்​கு​திரை வாக​னத்​தில் எழுந்​தருள்​கிறார். அப்​போது, வைகை ஆற்​றில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்டு தரிசனம் செய்​வர்.

பின்​னர் ராம​ராயர் மண்​டபம் செல்​கிறார். அன்று இரவு வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லில் தங்​கு​கிறார். மே 2-ல் தேனூர் மண்​டபத்​தில் மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்​கிறார்.

அன்​றிரவு ராம​ராயர் மண்​டபத்​தில் தசாவ​தா​ரம் நடை​பெறும். மே 3-ல் மோகினி அவதா​ரத்​தில் பத்தி உலா​வுதல் நடை​பெறும். பின்னர் அனந்தராயர் பல்​லக்​கில் ராசாங்க திருக்​கோலத்​தில் எழுந்​தருள்​கிறார்.

மே 4-ம் தேதி மன்​னர் சேதுபதி மண்​டபத்​தில் பூப்​பல்​லக்​கில் எழுந்​தருளியபின், அழகர்​மலைக்கு திரும்​பு​கிறார். மே 5-ம் தேதி கோயிலை சென்​றடைகிறார். மே 6-ம் தேதி உற்​சவ சாந்​தியுடன் திரு​விழா நிறைவு பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!