தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார் பேரறிவாளன்

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேர் தண்டனை பெற்றனர். பின்னர், இவர்களை சுப்ரீம் கோர்ட்டு முன்கூட்டியே விடுவித்து உத்தரவிட்டது. பேரறிவாளன் சிறையில் இருந்தபோது, பல பட்டப்படிப்புகளை முடித்தார். இந்தநிலையில், சிறையில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியில் வந்த பேரறிவாளன், வக்கீல் தொழிலை தேர்வு செய்தார். இதற்காக பெங்களூருவில் உள்ள சட்டக்கல்லூரியில் 3 ஆண்டு சட்டப்படிப்பில் சேர்ந்தார். சட்டப்படிப்பை முடித்து விட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார்.

இவரை போல வக்கீலாக பதிவு செய்த மொத்தம் 1,248 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி ஐகோர்ட்டு கூட்டரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தலைமை தாங்கினார். பார் கவுன்சில் உறுப்பினரும், புதிய வக்கீல்கள் பதிவு கமிட்டியின் தலைவருமான கே.பாலு உறுதி மொழியை வாசித்து, பேரறிவாளன் உள்ளிட்ட புதிய வக்கீல்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, புதிய வக்கீல்களை வாழ்த்தி, வக்கீல் தொழிலின் மாண்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!