95 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு

புதுடெல்லி: ஈ​ரான் மீதான தாக்​குதலுக்​குப்​பின் 95 நாடு​களில் பெட்​ரோல் விலை உயர்ந்​துள்​ளது.

அமெரிக்க, இஸ்​ரேல் கூட்டுப்படை மற்றும் ஈரான் இடையிலான பேராரால், 95 நாடு​களில் எரிபொருள் விலை உயர்ந்​துள்​ளது. அமெரிக்​கா​வில் ஒரு கேலன் (3.8 லிட்​டர்) பெட்​ரோல் விலை ரூ.2.94 டாலரில் இருந்து 3.58 டால​ராக உயர்ந்​துள்​ளது. இது 20 சதவீத உயர்வாகும்.

அமெரிக்​கா​வில் உள்ள மாநிலங்​கள் தங்​கள் இஷ்டத்துக்கு பெட்​ரோல் விலைகளை உயர்த்​தி​யுள்​ளன. பல மாநிலங்​களில் ஒரு கேலன் பெட்​ரோல் 4 டாலரை தாண்​டி​விட்​டது. கலி​போர்​னி​யா​வில் ஒரு கேலன் 5 டாலரை தாண்​டி​விட்​டது. இது கடந்த 2 ஆண்​டு​களில் மிக அதி​கமான விலை உயர்வாகும். சில நாடு​கள் மாத இறு​தி​யில்​தான் எரிபொருள் விலை மாற்​றத்தை அறிவிக்​கும்.

அதனால் அடுத்த மாதம் முதல் பல நாடு​களில் பெட்ரோல் விலை அதி​கரிக்​கும். கம்​போடி​யா​வில் பெட்​ரோல் விலை அதி​கபட்​ச​மாக 68 சதவீதம் உயர்ந்​துள்​ளது. வியட்​நாமில் 50 சதவீதம், நைஜீரியாவில் 35 சதவீதம், லாவோஸில் 33 சதவீத​ம், கனடா​வில் 29 சதவீத​ம் பெட்​ரோலிய எரிபொருள் விலை உயர்ந்​துள்​ளன.

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கொண்டு வரப்​படும் பெட்​ரோலிய எரிபொருட்​களை ஆசிய நாடு​கள் அதி​கம் சார்ந்​துள்​ளன. கிழக்கு ஆசி​யா​வில் உள்ள ஜப்​பான் 95 சதவீத எரிபொருளை​யும், தென் கொரியா 70 சதவீத எரிபொருளை​யும் ஆசிய நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​கின்​றன. அதனால் இவை அவசர​கால நடவடிக்கைகளை அமல்​படுத்​தி​யுள்​ளன. தென் கொரியா கடந்த 30 ஆண்​டு​களில் முதல் முறை​யாக பெட்​ரோல், டீசலுக்கு அதிகபட்ச விலையை நிர்​ண​யித்​துள்​ளது.

தெற்​காசிய நாடு​களில் பாதிப்பு இன்​னும் மோச​மாக உள்​ளது. பாகிஸ்​தான் மற்​றும் வங்​கதேசத்​தில் எரிபொருள் சேமிப்பு வசதி குறை​வாக உள்​ளது. இதனால், வங்​கதேச அரசு பல்கலைக்கழகங்களை மூட உத்​தர​விட்​டுள்​ளது. பாகிஸ்​தானில் அரசு அலு​வல​கங்​கள் வாரத்​துக்கு 4 நாட்​கள் மட்​டுமே இயங்குகின்றன. பள்​ளி​கள் மூடப்​பட்​டுள்​ளன.

எரிபொருளை சேமிக்க 50 சதவீத பணி​கள் வீட்​டிலிருந்தே மேற்கொள்ள நடவடிக்​கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. எரிபொருள் விலை உயர்வு குறித்து ஆலோ​சிக்க, ஐரோப்​பிய நாடு​களில் ஜி 7 நிதியமைச்​சர்​களின் அவசர கூட்​டம் நடை​பெற்​றது. அவசர கால எரிபொருள் சேமிப்​பிலிருந்து 20 முதல் 30 சதவீதம் எரிபொருட்களை விடுவிக்​கும் ஆலோ​சனையை பிரான்ஸ் அதிபர் மேக்​ரான் தெரி​வித்​துள்​ளார்.

எரிபொருள் விலை உயர்வு காரண​மாக அத்​தி​யா​வசி​யப் உணவுப் பொருட்​களின் விலை எல்​லாம் உலகம் முழு​வதும் உயர்ந்​துள்​ளது. எரிபொருள்​ விலை உயர்​வால்​ போக்​கு​வரத்​து செல​வும்​ அதிகரித்துள்​ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!