பொது மக்களுக்கு ரத்த பரிசோதனை:Read More
சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி. இந்திய தேசிய மாணவர் சங்கம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சிபிஐயில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசு தரப்பு விளக்கம். அரசு விளக்கத்தை ஏற்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.Read More
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி. அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாயினர். இது குறித்து நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெ்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.Read More
‘வயல்வெளியில் கிடந்த குண்டு!’.. ‘வெடித்துச் சிதறியதில்’ இருவருக்கு நேர்ந்த கதி.. பீதியை கிளப்பிய சம்பவம்! செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அவர் வழக்கம் போல் தன்னுடைய விவசாய நிலத்துக்கு சென்றபோது, அங்கு குண்டு ஒன்று கிடந்ததைக் கண்டார். அதை எடுத்தவர், தனது இருசக்கர வாகனத்தின் முன்பக்கமாக வைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த சமயத்தில், குண்டு தவறிப்போய் கீழே […]Read More
சேலம்: பேருந்தில் இருந்து ரூ.1 கோடி கொள்ளை சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த தொழிலதிபரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் இருந்து தங்க நகைகளை விற்பனை செய்த பணத்துடன் கோவைக்கு ஆரஞ்சு டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்தில் தொழிலதிபர் ஹரிஷ் என்பவர் பயணம் செய்தார். வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே பேருந்து நிறுத்தப்பட்ட போது ஹரிஷ் வைத்திருந்த பணப் பையை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பி விட்டனர். […]Read More
மகாகவி பாரதியார் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுகிறேன் தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார் ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற அவரின் ஒரு கூற்றே, மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை விளக்குகிறது பாரதியாரின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாக உள்ளது – பிரதமர் மோடிRead More
வன்கொடுமை செய்து ‘கொல்லப்பட்ட’ பெண் புகார்… கைதுசெய்யப்பட்டவர்கள் அதிர்ச்சி..!!!! உதவிக்காக அவள் அழைத்த எந்தக் குரலும் யார் காதிலும் விழவில்லை. காரணம், அங்கு ஏற்கனவே ஒலித்துக் கொண்டிருந்த ஒலிபெருக்கிச் சத்தம். 4 பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, உயிர்பிழைத்த பெண் அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் ராய்ப்பூரில் நடைபெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள தனது மாமா வீடில் […]Read More
ஜிஎஸ்டியால் நலிந்து வரும் குடியாத்தம் தீப்பெட்டித் தொழில்: மூலப் பொருள்கள் மீதான விலை உயா்வு, ஆள்பற்றாக்குறை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளின் கெடுபிடி உள்ளிட்ட காரணங்களால் கொஞ்சம், கொஞ்சமாக நசிந்து வந்த தீப்பெட்டித் தொழில் இன்று ஜிஎஸ்டி வரி விதிப்பால் மேலும் நசிந்துள்ளது. மாடி வீடு முதல் குடிசையில் வசிப்பவா் வரை எல்லாத் தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு சில பொருள்களில் தீப்பெட்டியும் ஒன்று. நவீன லைட்டா்கள் வந்த போதிலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறையவில்லை. […]Read More
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டும் போதாது: வெங்கய்ய நாயுடு புணே: ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்களை இயற்றுவது மட்டும் தீா்வாகாது. ஆட்சியாளா்கள் மத்தியிலும், நிா்வாக ரீதியாகவும் தகுந்த நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா். தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!