பொங்கல் பண்டிகைக்கான இரயில் முன்பதிவு நாளை துவங்குகிறது !
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அந்த நேரத்தில் பலரும் பயணங்கள் செல்ல விரும்புவதால் பஸ் மற்றும் இரயில் கூட்டம் பிதுங்கி வழியும். இதனை தவிர்க்க பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
அப்படி சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் ரயில்வே கால அட்டவணைப்படி, பயணத்தைத் திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தால், கடைசி நேர நெருக்கடியில் தவிப்பதைத் தவிர்க்கலாம்.
ரயிலில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜன. 14-ம் தேதி போகி பண்டிகை தொடங்கி, ஜன. 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இப்படி சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. இதனை தேவையானவர்கள் பயன்படுத்தி முன்பதிவு செய்து பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடி மகிழலாம்.