சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

 சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக கடும் நெருக்கடிகளை சந்தித்தாக பொதுமக்கள் எழுப்பிய புகாரின் காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை கிழக்கு இணை கமிஷனராக இருந்த திஷா மிட்டல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கப் பிரிவு துணை கமிஷனர் ஆதர்ஸ் பச்சேரா, நெல்லை துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏஆர். ரகுமானின் “மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி” தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தாம்பரம் காவல் ஆணையருக்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் தாம்பரம் காவல் ஆணையர் நேரில் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி மற்றும்  சென்னையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சந்தித்தார். இதனை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகள் இரண்டு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து தொடர்பாக பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன்  கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் சர்ச்சை ஏற்பட்டது.

இதன் காரணமாக பெருநகர சென்னை காவல் கிழக்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...