அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்

 அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

டில்லி பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். அந்த விருந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடு முழுவதும் மிக சுவையான 500 உணவுகளை தேர்வு செய்து, பங்கேற்ற தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது.

டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்தில் கலந்து கொண்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.

விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்த போது  இருவரும் கைகுலுக்கினார்கள். அப்போது முதல்வர் ஸ்டாலினை அமெரிக்க அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில் அமெரிக்க அதிபர் பைடன், பிரதமர் மோடி, ஸ்டாலின், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தற்போது, இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி  வருகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...