வட்டி விகிதத்தை குறைக்கும் சீனா…! | தனுஜா ஜெயராமன்
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகள் அடுத்தடுத்து பணவீக்கத்தை குறைக்க பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைத்து வரும் வேளையில், சீனா தனது உள்நாட்டு நுகர்வை மேம்படுத்த வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த வரிகுறைப்பு மட்டும் அல்லாமல் அனைத்து வங்கிகளுக்கும் சீன அரசு அதிகப்படியான கடன்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சீன நாட்டின் மத்திய வங்கியான பீப்பிள் பேங்க் ஆப் சீனா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அந்நாட்டின் ஒரு வருட கடனுக்கான ப்ரைம் ரேட் 3.55 சதவீதத்தில் இருந்து 3.45 சதவீதமாக குறைந்துள்ளது.
இதேபோல் 5 வருட கடனுக்கான ப்ரைம் ரேட் 4.2 சதவீதமாக குறைத்துள்ளது. இது ஜூன் மாத குறைப்பிற்கு பின்பு பதிவான வரலாற்று சரிவாகும்.
கடந்த சில மாதங்களாக சீன மக்களின் நுகர்வு அளவுகள் பெரிய அளவில் குறைந்தும், உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டு ஏற்றுமதி அளவுகளும் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இதை சமாளிக்கும் வகையில் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்புகள் சீன மக்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும் இதேபோல் சர்வதேச சந்தையில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் சீனாவின் வட்டி விகித குறைப்பு சீனாவுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் கட்டாயம் பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.