“Dunzo “செய்யும் பணிநீக்கம் மற்றும் சம்பளகுறைப்பு … ஊழியரகள் அதிர்ச்சி! | தனுஜா ஜெயராமன்
இந்திய அளவில் உணவு மற்றும் சேவை துறையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செய்வது ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், சோமோட்டோ-வின் blinkit, Dunzo, zepto ஆகிய நிறுவனங்கள் தான். உணவு டெலிவரி சேவை துறையை காட்டிலும் அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகளை கொண்டிருந்த காரணத்தால் இத்துறை நிறுவனங்களில் அதிகப்படியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டுகளை பெற்று வந்தது. அப்படி Dunzo நிறுவனத்தில் கூகுள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்தது.
உணவுகள், திண்பண்டங்கள் , மளிகை பொருட்கள், காய்கறி, பால், தயிர் என வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் குவிக் காமர்ஸ் பிரிவில் ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்யப்படுகிறது.
இந்தியாவில் உணவு டெலிவரி சேவை துறை நிறுவனங்களின் உச்சக்கட்ட வளர்ச்சியையும், விரிவாக்கத்தையும் அடைந்து வரும் வேளையில் குவிக் காமர்ஸ் வர்த்தகம் யாரும் கணித்திடாத வகையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வந்தது.
Dunzo இந்த வருடம் துவக்கம் முதல் அதிகளவிலான மறுசீரமைப்பு பணிகளை செய்து வந்த நிலையில், பலரை பணிநீக்கம் செய்தது இத்துறையில் தலைப்பு செய்தியாக மாறியது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் Dunzo நிர்வாகம் ஜூன் மாதம் சுமார் 50 சதவீத ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை ரத்து செய்துள்ளது.
சுமார் 300 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஜனவரி மாதம் 80 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 50 சதவீத ஊழியர்களுக்கான சம்பள உயர்வு கட் செய்யப்பட்டு பெரும் நெருக்கடியை ஊழியர்களுக்கு அளித்துள்ளது.
Dunzo நிர்வாகத்தின் இந்த சம்பள கட் முடிவால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்நிறுவன உயர் அதிகாரிகள் தான் என தகவல் வெளியாகியுள்ளது.
Dunzo நிறுவனத்தில் சுமார் 1000 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், 50 சதவீத ஊழியர்கள் எனில் சுமார் 500 ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்கப்படாமல் உள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
Dunzo நிறுவனத்தின் நிதி புழக்கத்தையும் நிதி பயன்பாட்டையும் சரி செய்ய இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.