மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம்! | தனுஜா ஜெயராமன்
மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை காஞ்சிபுரத்தில் கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்திற்காக சுமார் ஒரு கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பித்த நபர்களுக்கு குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் 18ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த மேல்முறையீடுகள் அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும்
பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராக கோட்டாட்சியர் செயல்படுவார் என்றும் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.