புனிதம் தரும் புரட்டாசி! | தனுஜா ஜெயராமன்

 புனிதம் தரும் புரட்டாசி! | தனுஜா ஜெயராமன்

புரட்டாசி மாதம் என்பதே புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் இருப்பதாலும் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் . நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம்.

வீட்டிலும் மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள். எல்லா சனிக்கிழமையிலும் தளிகை போடுவது மரபு.

 அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான். இந்த மாத்தில்தான் பெருமாள் பக்தர்கள் பலர் சனிக்கிழமைகளில்  பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள்.

இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுவர். புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் உடல் பிணி அதிகமாக வரும். ஆகையால் புரட்டாசி மாதம் சீக்கிரம் ஜீரணம் ஆககூடிய உணவு வகைகளை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.

திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.

வசதி வாய்ப்பு உள்ளவர்கள் இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம்.

வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்நாளில் பெருமாளுக்கு தளிகை ப்ரசாதம் இட்டு வழிபடுவது வழக்கம்.

 திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப்  பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். சக்கரை பொங்கல் படைத்து நெய்வேத்யம் செய்வது வழக்கம்.பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...