அதக்களத்தில் டெல்லியும், காத்தாடியும்!
அதக்களத்தில் டெல்லியும், காத்தாடியும்!
ஸ்ரீமான்கள் டெல்லி கணேஷ் & காத்தாடி ராமமூர்த்தியை எனக்கு 25 வருட பழக்கம்.
அவர்கள் பாரதிகலை மன்ற நிகழ்ச்சிக்காக குவைத் வந்திருந்த போது நெருங்கி பழக ஆரம்பித்தது ..இன்று வரை அதே இறுக்கத்தில்!
அவர்களின் ‘பட்டினப்பிரவேசம்’ முதலே அடியேன் அவாளின் ரசிகன்!
இருவரிடத்திலும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
இருவருமே பரோபகாரிகள். மனிதாபிமானிகள்! நடிப் -புலிகள்! இயல்பிலேயே அசால்டாக ஜோக்கடிப்பவர்கள்!.
இவர் அவரை குரு என்பார். அவர் இவரை !எவருக்கு எவர் குருவென குழப்பம் ஏற்படும். இருவரையும் பெரும்பாலும் ஒன்றாய்ப் பார்க்கலாம் .
இருவருமே நல்ல வாசிப்பாளர்கள்.எழுத்தை நேசிப்பவர்கள்.
டெல்லி ஒரு சமயம் திடீரென என்னை அழைத்து ” உங்களுடைய ‘யார் அந்த நிலவு’ புத்தக விமர்சனம் தினமலரில் பார்த்தேன்.அதை அனுப்பித் தரமுடியுமா -என்று கேட்டது பெருமிதம்.
அவர் குமுதத்தில் நீண்ட வாரங்கள் படைத்த டெல்லி தர்பார் தொடர் கட்டுரையின் சமீபத்தைய நூல் வெளியீடு .. நச் !
குறித்த நேரத்தில் ஆரம்பித்து ஆடிட்டர் J.பாலசுப்ரமணியம் ( JB ) , டைரக்டர்கள்-கே எஸ் ரவிக்குமார் ,சுரேஷ் கிருஷ்ணா ,லிங்குசாமி ,பதிப்பாளர் சாதிக் போன்ற விருந்தினர்களும் தொகுப்பாளர் சந்திரமோகனும் பேச்சில் கனக்கச்சிதம்.
டெல்லி, வழக்கம் போல ‘ரொம்ப’ அப்பாவியாக பேசி அரங்கை குலுங்க வைத்தார்.போதும் போதாதிற்கு காத்தாடியையும் அழைத்து “ஆஹா ” பட சீனை அங்கு மேடயில் –
சீன் போட்டு அதக்களம் !
*******************
***** நூல் வெளியீடுகளில் வழக்கமாய் ‘ படு’ த்தப்படும் விஷயம் ஒன்று உண்டு.( ஏற்கனவே PKP பதிந்தது தான்)
அந்த நூல் என்ன குற்றவாளியா—வெளியே தெரியாமல் மறைக்க ?அல்லது அச்சாகி யாரும் பார்க்காமல் நேராக மேடையில் வந்து தான் ரகசியமாய் பிரிக்கப்படுகிறதா?
GIFT ராப்பரில் ஒட்டப்பட்டிருந்த புத்தகங்களை அன்று, மேடையில் யார் முதலில் பிரிப்பார்கள் என போட்டி வைத்த மாதிரியாயிற்று.
அப்புறம்—
**** டைரக்டர்கள் மூவரும் எளிமையானவர்களாக பாவித்துக்கொண்டாலும் கூட-
நிகழ்ச்சி முடிந்தவுடன் …… காணவில்லை! பார்வையாளர்களுக்கு அகமும் முகமும் கொடுக்காமல் சொல்லி வைத்தது போல எஸ்கேப்!
பாவம்.. அவர்களுக்கு அப்படி என்ன அவசரமோத் –தெரியவில்லை!
–
பட மிக்ஸ் : ஹரிலக்ஷ்மன்.
– என்.சி.மோகன்தாஸ்