அமர்க்களமான TMS நூற்றாண்டு விழா!
அமர்க்களமான TMS நூற்றாண்டு விழா!
மழையும் தூவானமுமாய் TMS ன் நூற்றாண்டு தொடர்ந்து கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
அதில் சமீபத்திய – சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் TMS 100 விழா-அற்புதம். TKS கலவாணனின் அமர்க்கள ஏற்பாடு!
விருந்தினர் மற்றும் விழா நிகழ்வுகள் அத்தனையும் – அழைப்பிதழ் படி அப்படியப்படியே நடத்தினதில் நெகிழ்ச்சி.( விழா விபரத்துக்கு அழைப்பிழல் இணைப்பு)
மேடையில் பேனர் , கட்டினதில் ஆரம்பித்து…அனைத்திலும் கலைவாணனின் பங்களிப்பு இருந்தது.
****தளர்ச்சியில்லா – VG. சந்தோஷத்தின் பேச்சு ! பாடல் ! விஜய கிருஷ்ணனின் செம்மொழித் தொகுப்பு !
***வருவாரோ மாட்டாரோ – என்கிற பதைப்பிற்கிடையில் ஜெக ஜோராய் வந்த தமிழச்சி தங்கப்பாண்டியன் MP யைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் ! சொல்லின் செல்வியாக செருக்கில்லாத அணுகுமுறையிலும் – பேச்சிலும் அசத்தினார்.
***TMS நூற்றாண்டை ஒட்டின பல நிகழ்வுகளை கண்டிருக்கிறேன்.
பலரும் பல காலமாய் தொடர்ந்து பாடி வந்தாலும் கூட மேடயில் எழுதி வைத்து , பார்த்து படித்து கச்சேரி செய்பவர்களே அதிகம்.
ஆனால் TKS கலைவாணன் இதில் விதிவிலக்கு. TMS சின் நினைவலைகளை அவர் விளம்பின பாங்கு.அறுசுவை!
தன் சொற்பொழிவிற்கிடையே ‘ பிட் ‘ பேப்பரின்றி ‘ விட் ‘ அடித்து – TMS ன் அருமை பெருமைகளுடன் அவரது பாடல்களையும் அதே லாவகத்துடன் பாடி சிலிர்க்க வைத்தார்.
மற்ற எந்தப் பாடகர்களின் குரலிலும் பாட பலர் உண்டு. ஆனால் TMS ஐ பிசிறாமல் ஒலிப்பது என்பது கடினம்.
ஆனால் TKS ன் குரல் ஒலிப்பும்- லாவகமும் அசத்தல்!
வாஸ்த்தவத்தில் —
அழைப்பின் மரியாதைக்கு சும்மா செத்த நாழி இருந்துட்டு கிளம்பலாம் என்று தான் சென்றிருந்தேன். ஆனால்–
ஜன கண மன நிறைவு வரை அமர வைத்து விட்டார் TKS கலைவாணன்!
–– என்.சி.மோகன்தாஸ்
பட மிக்ஸ் : ஹரிலக்ஷ்மன்
1 Comment
டி.எம்.எஸ்100 விழா குறித்த தங்கள் ஆய்வுபூர்வமான விமர்சனம் மனதை நெகிழச் செய்தது.தங்கள் வருகை மனதுக்கு பேருவகை தந்தது.. தாங்கள் ஒரு தலைசிறந்த கலா ரசிகர் என்பதையும் உணர்த்தியது.எங்கள் மன்றத்தின் அடுத்த விழாவுக்கும் தாங்கள் வருகை தர வேண்டும்.இப்போதே அழைக்கிறேன்..மிக்க நன்றி. வாழ்க.டி.கே.எஸ்.கலைவாணன்.