இன்றைய ராசி பலன் (வெள்ளிக்கிழமை 15 செப்டம்பர் 2023)

 இன்றைய ராசி பலன் (வெள்ளிக்கிழமை 15 செப்டம்பர் 2023)

மேஷம் :  இன்று அதிர்ஷ்டமான நாள் . கடினமான பணிகளையும் என்று எளிதாக முடிப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்களின் திறமை காரணமாக நீங்கள் உங்கள் உங்கள் சக பணியாளர்களை காட்டிலும் முந்தி இருப்பீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். இன்று அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

ரிஷபம் : இன்று நீங்கள் சுய வளர்ச்சிக்கான செயல்களில் ஈடுபட ஏற்ற நாள். என்றாலும் இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. நெருங்கிய நண்பர்கள் கூட நம்பிக்கை துரோகம் செய்வார்கள். பணிகள் சலிப்பை தருவதாக இருக்கும். உங்களின் அஜாக்கிரதை காரணமாக பண நஷ்டம் ஏற்படலாம்.

மிதுனம் :  இன்று ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவதற்கு உகந்த நாள். இன்று பிரார்த்தனை மேற்கொள்வது மற்றும் இசை கேட்பது உங்களுக்கு ஆறுதலைத் தரும். இந்த நாட்டங்கள் தான் நீங்கள் விரும்பும் ஆறுதலை உங்களுக்கு பெற்றுத் தரும். பணியிடத்தில் கடுமையான பணிகள் காணப்படும். பணப்புழக்கும் குறைந்து காணப்படும்.

கடகம் : உங்கள் திறமையான தொடர்பு மூலம் நல்ல பலன்களைக் காண முடியும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மற்றும் மந்திர உச்சாடனம் செய்வது ஆன்மீக சொற்பொழிவுகள் கேப்பதன் மூலம் சிறப்பாக உணரலாம். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்களிடம் காணப்படும் பணம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : இன்று கடினமான சவால்கள் காணப்படும். நீங்கள் திறமையாக கையாள வேண்டும். ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் தரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. இன்று அதிகப்படியான பணிகள் காணப்படும். இன்று பண வரவு குறைந்து காணப்படும். தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும். அதிக சிந்தனை காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி : இன்று நீங்கள் கவலைக்கு ஆளாகலாம். இதனால் உங்கள் அடிப்படை பணிகளைக் கூட உங்களால் செய்ய இயலாது. சகஜமான அணுகுமுறை தேவை. தன்னம்பிக்கையின்மை காரணமாக இன்று பணியில் மந்த நிலை காணப்படும். இன்று அதிக செலவுகள் காணப்படும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

துலாம் : அனைத்து விஷயங்களிலும் பொறுமை தேவை. மனதில் குழப்பத்திற்கு ஆளாகாதீர்கள். எந்த செயலையும் செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். சிறிது மந்தமாக காணப்படுவீர்கள். உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். இன்று தேவையற்ற செலவுகள் காணப்படும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது.

விருச்சிகம் : இன்று உங்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் கிடைக்கும் வகையிலான நற்பலன்கள் காணப்படும்.பிறருடன் சுமூகமாகப் பழகுவது நன்மை தரும். வாழ்வின் நன்மைகளையும் தீமைகளையும் நீங்கள் உணர்வீர்கள். உங்கள் கடின உழைப்பு காரணமாக உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு  :   இன்று செயல்பாடு மிக்க நாளாக இருக்காது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மகிழ்வைத் தரும். இன்று செயல்கள் சமூகமாக நடைபெறாது. பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படாது. கவனக்குறைவு காரணமாக தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். இதனால் பணம் இழந்து கவலைப்படுவீர்கள். உங்களிடம் பதட்டமும் பாதுகாப்பின்மையும் காணப்படும்.

மகரம் : இன்றைய நாள் அவ்வளவு சிறப்பான பலன்கள் கிடைக்காது. தைரியம் குறைந்து காணப்படும். என்றாலும் நம்பிக்கையுடன் தைரியமான மன ஆற்றலுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று அதிக பணிகளை சுமக்க நேரும். பண வளர்ச்சி திருப்திகரமாக இருக்காது. இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

கும்பம் : இன்று செயல்பாடு மிக்க நாளாக இருக்காது. இன்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். இன்று குறைந்த எதிர்பார்ப்புடன் காரியம் ஆற்றினால் அதற்குண்டான வெகுமதி கிடைக்கும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். நிதிநிலைமை மோசமாக காணப்படும்.

மீனம் : உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உங்களின் விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறை காரணமாக நல்ல பலன்கள் கிடைக்கும். நல்ல உறவை பராமரித்து உங்கள் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தவரின்நல்லுறவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் ஆற்றலுடன் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள். பணியிடச் சூழல் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...