நிமிடத்தில் விற்று தீர்ந்த இரயில் டிக்கெட்டுகள்! | தனுஜா ஜெயராமன்
ரஜினி பட டிக்கெட்டுக்கள் போல 30 நிமிடத்தில் விற்று தீர்ந்தது இரயில் டிக்கெட்டுகள் . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கும் என ஏற்கனவே தெற்கு இரயில்வே அறித்திருந்த்து. புக்கிங் ஒபனான சில நிமிடங்களியே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகையைக் காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல பல இன்னல்களை சந்திக்க வேண்டிவரும். ஆயரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் சிக்கி அவதிப்படுவர்.
இதன் காரணமாகவே தெற்கு இரயில்வே பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட்கள் முன்பதிவினை தொடங்குகிறது.
பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8மணிக்குத் துவங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் இருக்கைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. சில ரயில்களில் 30 நிமிடத்திற்குள் முன்பதிவு நிறைவடைந்தது. எதாவது சிறப்பு ரயில்கள் திட்டம் வருமா ? என காத்துகிடக்கிறார்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரு்ம்பும் பயணிகள்.