அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்! | தனுஜா ஜெயராமன்
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில், லியோ படத்தில் நடித்துள்ள இரண்டு வில்லன் நடிகர்களை இயக்குனர் மகிழ்திருமேனி புக் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கசிந்திருக்கிறது.
அஜித் முதலில் விக்னேஷ் சிவனுடன் படம் நடிக்க ஒப்புக்கொள்ள அதன்பிறகு திடீர் மாறுதலாக மகிழ்திருமேனி அஜித்துடன் கைகோர்த்துள்ளார்.
“விடாமுயற்சி” படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன போதிலும், இதுவரை ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை.
ஆனால் தற்போது படப்பிடிப்பு துவங்குவதற்கான பணிகள் அபுதாபியில் தொடங்கி இருப்பதாகவும், படக்குழுவினர் அங்கு படப்பிடிப்புக்கு தேவையான பணிகளை செய்து வருவதாகவும், இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது லியோ பட நடிகர்கள் இரண்டு பேர் ‘விடாமுயற்சி’ படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்க இந்த படத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ’மங்காத்தா’ படத்தில் அர்ஜூனுடன் இணைந்துள்ளார் அஜித். ஆனால் முதல் முறையாக சஞ்சய் தத்துடன் இணைவதால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.