மகளிர் உரிமைத் தொகை நிராகரிப்பு விண்ணப்பத்திற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்! |தனுஜா ஜெயராமன்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணபித்த 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, சம்பந்தப்பட்ட மகளிருக்கு அரசு சார்பில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் மூன்று லட்சம் பேர் அரசு பணியில் இருப்பதால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தலைவிகள், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் குடும்பங்களில் உள்ள குடும்ப தலைவிகள் ஆகியோரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிற்கு 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் மகளிரும் விண்ணப்பத்திருந்ததாக கூறப்படுகிறது. சொந்தமாக கார், டிராக்டர் உட்பட நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்களும் விண்ணப்பத்திருந்த நிலையில், அவர்களது விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, சம்பந்தப்பட்ட மகளிருக்கு வரும் 15-ந்தேதி குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.