குக் வித் கோமாளி” ப்ரபலம் பிக்பாஸில் வருகிறாரா? | தனுஜா ஜெயராமன்

 குக் வித் கோமாளி” ப்ரபலம் பிக்பாஸில் வருகிறாரா? | தனுஜா ஜெயராமன்

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதில் குக்வித் கோமாளி ஷோவில் வந்த ப்ரபல நடிகை பிக்பாஸ் 7 ல் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் பரவி வருகிறது. யார் அந்த ப்ரபலம் தெரியுமா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ வீடியோக்கள் தொடர்ந்து. வெளியாகி வருகின்றன . அதில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சி குறித்த தகவலை தெரிவித்து வருகிறார்.

ந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முந்தைய சீசனில் களமிறங்கிய நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் கோபாலசாமி, ரேகா நாயர், பப்லு பிரித்திவிராஜ், குக் வித் கோமாளி ரக்‌ஷன், நடிகர் அப்பாஸ், அம்மு அப்ராமி, மாடல் ரவிக்குமார், மாடல் நிலா,  நடிகர் சந்தோஷ் பிரதாப், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகர் பப்லு, அகில், சோனியா அகர்வால், விஜே பார்வதி, பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா, நடிகர் விக்னேஷ், பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கிக் வித் கோமாளியில் வந்த நடிகை தர்ஷா குப்தா பிக்பாஸ் 7 சீசனில் பங்கேற்க இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...