ப்ரபல ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள “ஜவான்”! |தனுஜா ஜெயராமன்

 ப்ரபல ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள “ஜவான்”! |தனுஜா ஜெயராமன்

ஷாருக்கானின் ஏற்கனவே வெளியான ‘பதான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது ஜவான் படத்தினை அவரது ரசிகர்கள் அதே வரிசையில் வெற்றிபடமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை 400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஜவான் படம் இரண்டு நாட்களில் 240 கோடிய 47 லட்ச ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, நான்கு நாட்களில், உலகம் முழுவதும் 520 கோடியே 79 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் படம் வசூலில் பெரிதும் முன்னேறி வருகிறது.

இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியாகி 4 வாரங்கள் முடிவடைந்த பிறகு ஜவான் ஓடிடியில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...