விஷால் நடித்த “மார்க் ஆண்டனி” திட்டமிடப்படி திரையரங்கில் வரும்! |தனுஜா ஜெயராமன்
விஷால் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் மார்க் ஆண்டனி படத்திற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா
அபிநயா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது.
அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி P.T.ஆஷா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இரும்புத் திரை படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் வெளிவந்த “சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி” ஆகிய ஏழு படங்களுமே தோல்விப் படமாகத்தான் அமைந்தது. இந்த மார்க் ஆன்டணி திரைப்படமாவது கை கொடுக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.