டெல்லி செல்கிறார் ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். டெல்லியில் ஜனாதிபதி அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை ஞாயிற்றுக்கிழமை(10-ந் தேதி) மதியம் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.
‘ஜி-20’ மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார்.
ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்மந்திரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக சர்வதேச தலைவர்கள் பலர் டெல்லிக்கு வர உள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்தர பிரதேச விமான நிலையங்களில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கே சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் டெல்லியில் மொத்தமாக பாதுகாப்பு மாற்றப்பட்டு உள்ளது. நகரத்திற்கு உள்ளே பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.