இனி ஆதிகுணசேகரனாக இவரா? | தனுஜா ஜெயராமன்

 இனி ஆதிகுணசேகரனாக இவரா? | தனுஜா ஜெயராமன்

சன் டிவியின் டிஆர்பி-யில் பட்டையை கிளப்பி வந்த எதிர்நீச்சல் சீரியலில் தற்போது எதிர்பாராத சோகம் நடந்து இருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும், சோகமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ஆதி குணசேகரனாக கலக்கி வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதை தொடர்ந்து இனி குணசேகரன் யார் என கேள்வி எழும்பி வந்தது. பல்வேறு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஆதி குணசேகரனின் மரணம். ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த மாரிமுத்து தற்பொழுது தான் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிட தக்கது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனாகவே வாழ்ந்திருப்பார் மாரிமுத்து.

இந்நிலையில் தற்பொழுது எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் ஒருவர் தான் மாரிமுத்து சாயலில் இருக்கிறார் எனவே இயக்குனர் திருச்செல்வம் அவரை அணுக முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மாரிமுத்துவைப் போல ஆதிகுணசேகரனாக மிளிர்வாரா வேல ராம மூர்த்தி? என்கிற சிந்தனையில் உள்ளது சீரியல் ரசிகர்கள் வட்டாரம்..

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...