பிக்பாஸ் பட்டியலில் இந்த ப்ரபலங்களா? | தனுஜா ஜெயராமன்

 பிக்பாஸ் பட்டியலில் இந்த ப்ரபலங்களா? | தனுஜா ஜெயராமன்

மல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள 18 போட்டியாளர்களின் விவரம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ வீடியோக்கள் வெளியாகின என்பதும் அதில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சி குறித்த தகவலை தெரிவித்தார். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

உலகளவில் பேமஸ் ஆன இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தான் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அறிமுக சீசனே வேறலெவலில் ஹிட் ஆனது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வரப்போகும் பிரபலங்களின் பெயர்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, நடிகர் அப்பாஸ், நடிகை தர்ஷா குப்தா, நடிகை அம்மு அபிராமி, வி.ஜே ரக்சன், ஜாக்லின், காக்கா முட்டை விக்னேஷ், ஸ்ரீதர் மாஸ்டர், மாடல் ரவி குமார், மாடல் நிலா, நடிகை ரச்சிதா கணவர் தினேஷ், ரேகா நாயர், சந்தோஷ் பிரதாப், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பப்லு, அகில், சோனியா அகர்வால் வி.ஜே. பார்வதி ஆகிய 18 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதியில் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரிய வரும்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...