கீழடி அகழாய்வில் முழுமையான வட்டப்பானை கண்டெடுப்பு

கீழடி,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மார்ச் -18 தேதி முதல் 11ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டு செங்கல் கட்டுமானம், சாய கிண்ணங்கள், குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியில் 5ம் கட்ட அகழாய்வின் போது வித்தியாசமான வடிவில் வட்டவடிவிலான பானையின் மேற்பகுதி சேதம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் 11ம் கட்ட அகழாய்வின் போது சிறிய வடிவிலான முழுமையான பானை கண்டெடுக்கப்பட்டது மற்றும் அதன் அருகே உடைந்த சாயக்கிண்ணங்கள், கருப்பு நிற பானை, வாய் அகன்று காணப்படும் இருவண்ண சுடுமண் பாத்திரம் கண்டெடுக்கப்பட்டன. சிந்துவெளி நாகரிகத்திற்க்கு இணையான தொன்மையான செங்கல் கட்டுமாணங்கள் கீழடியில் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!