கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடந்தது.
நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற அணியினர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் நடிகர்கள் தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான 3 அணிகள் உட்பட 4 அணிகள் போட்டியிட்டன.
இந்நிலையில், வெற்றி பெற்ற நடிகர் பரத் தலைமையிலான அணியினர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
