‘மெட்ராஸ் மேட்னி’ படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர்.
அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்துக்கு கே.சி. பாலசரங்கன் இசையமைத்திருந்தார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டி உள்ளனர்.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயனுன் மெட்ராஸ் மேட்னி படக்குழுவை பாராட்டியுள்ளார். மேலும், படக்குழுவினருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இது குறித்த பதிவை நடிகர் காளி வெங்கட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
