Tags :கார்த்தி ஜெகன்

கவிதைகள்

மழை

சட்டென்று வானம் மங்க மேகம் கருக மழை பொங்க நிலத்தை தீண்டி உடையும் கண்ணாடி முத்தாய் மழை இசை எழுப்ப மண்வாசனை நாசியை நிரப்ப மின்னல் இருண்ட வானிற்கு ஒளி கொடுக்க இடியின் அதிரடி மேள சத்ததில் மழலைகள் பயந்து அம்மாவிடம் ஒளிய இரகசிய தீண்டலாய் ஜன்னலோர மழை தூளியை சின்ன சிறுசுகள் ஏந்தி காகித கப்பலில் மனதால் பயணிக்க சூடான தேநீருடன் இளசுகள் இன்பமாய் குளிர் காய செடி கொடியெல்லாம் குளித்து புன்னகையில் பூக்க சிலர் […]Read More

கவிதைகள்

நீயின்றி!

நங்கூரம் இன்றி அலைக்கடலில் நிலைக்கொள்ளாது கப்பல் நூலின்றி வின்னை நோக்கி பறந்து செல்லாது பட்டம் நீரின்றி மண்னை முட்டி முளைத்து வளராது செடி பிடிமானமின்றி மேல் நோக்கி உயர்ந்து வளராது கொடி நீயின்றி ஒர் நொடி கூட உடலில் நில்லாது உயிர்Read More

கவிதைகள்

மனைவி

சோகத்தில் சாயும் போது தோள் தருபவள் கோபத்தில் சாடும் போது தாங்கி கொள்பவள் ஆசையில் ரசிக்கும் போது உருகி மகிழ்பவள் அசதியில் அமரும் போது தலை கோதுபவள் உடல் நிலை குறையும் போது உயிர் துடிப்பவள்  மோகத்தில் அனைக்கும் போது துணை வருபவள் முதுமையில் துவளும் போது தாயாய் இருப்பவள் உடலும் உயிருமாய் கலந்து உயிர் தருபவள் மனைவி!Read More

கவிதைகள்

தமிழ்

முன் தோன்றிய முதுமை மொழி..! இலக்கணத்தின் இளமை மொழி..! உணர்வுகளின் கொஞ்சல் மொழி..! எண்ணங்களின் எழுச்சி மொழி..! கவிதையின் கலை மொழி..! எழுத்துகளின் எழில் மொழி..! உணர்ச்சியின் உச்ச மொழி..! உள்ளத்தின் உயிர்மொழி..! தமிழ்!Read More

கவிதைகள்

அவனும் நானும் – கார்த்தி ஜெகன்

அவனும் நானும் அவனும் நானும்  நிலவும் ஒளியும் அவனும் நானும்  பார்வையும் மொழியும் அவனும் நானும்  எழுத்தும் கவியும் அவனும் நானும் இதழும் முத்தமும் அவனும் நானும் மூச்சும் சுவாசமும் அவனும் நானும் குளிரும் போர்வையும் அவனும் நானும் உறவும் உணர்வும் அவனும் நானும் உடலும் உடையும் அவனும் நானும்  துடிப்பும் இதயமும் அவனும் நானும்  உயிரும் உயிரும் உயிரின்றி உடலில்லை அவனின்றி நானில்லைRead More

கவிதைகள்

தாய்மை

தன் உயிரின் உயிரை தன் உயிருக்குள் உரு கொடுத்து மசக்கையின் மயக்கத்தில் மனம் மகிழ்ந்து கணவனின் உள்ளங்கையில் – குழந்தையின்  உயிரோட்டத்தை உணரச்செய்து  உள்ளம் நெகிழ்ந்து துடிப்பில் துவண்டாலும் ஆவலில் ஆசையோடு காத்திருந்து   பேரலையாய் வரும் வலியை கடந்து பிரசவக்கடலில் உயிர் முத்தெடுக்கும் பெண்மையின் தாய்மை பெரும் வரம் பெற்ற பேரின்பம்Read More

கவிதைகள்

நீ

என் பிறப்பின் அர்த்தம் நீ என் உடலின் ரத்தம் நீ என் இதழின் முத்தம் நீ என் உறவின் பந்தம் நீ என் உள்ளத்தின் சத்தம் நீ என் உயிரின் சொந்தம் நீ என் வாழ்வின் வேதம் நீRead More

கவிதைகள்

உள்ளங்கையில்

தாய் மடி சாய்ந்து தாலாட்டில் கண் மூடும் பிள்ளை போல் உன் உள்ளங்கையின் இளஞ்சூட்டில் கண்ணம் பதித்து தலை சாயும் போது இமை மூடுகிறேன்Read More

கவிதைகள்

தூரம்

உன் கை கோர்த்து தோள் உரசி நடக்கும் போது… விண்ணுக்கும் மண்னுக்குமான இடைவெளி கூட… இமை இரண்டுக்குமுள்ள இடைவெளியாய் குறையுதடா!Read More

கவிதைகள்

கைப்பேசி

வார்த்தைகளை குறைவாக்கி வண்ண இதயங்களை பதிவாக்கி எண்களை தேடலாக்கி எண்ணங்களை நொடிகளாக்கி பொய்களை பரவலாக்கி பொம்மைகளை பதில்களாக்கி இயற்கை இசையை முடமாக்கி இன்னிசையை நிறைவாக்கி உலகை உள்ளங்கையாக்கி உறவுகளை தொலைவாக்கி கைகளை விலங்காக்கி கண்களை கைது செய்யும் மாய கண்ணாடி கைப்பேசி..!Read More