மழை
சட்டென்று வானம் மங்க
மேகம் கருக மழை பொங்க
நிலத்தை தீண்டி உடையும்
கண்ணாடி முத்தாய்
மழை இசை எழுப்ப
மண்வாசனை நாசியை நிரப்ப
மின்னல் இருண்ட வானிற்கு ஒளி கொடுக்க
இடியின் அதிரடி மேள சத்ததில்
மழலைகள் பயந்து அம்மாவிடம் ஒளிய
இரகசிய தீண்டலாய்
ஜன்னலோர மழை தூளியை
சின்ன சிறுசுகள் ஏந்தி
காகித கப்பலில் மனதால் பயணிக்க
சூடான தேநீருடன்
இளசுகள் இன்பமாய் குளிர் காய
செடி கொடியெல்லாம்
குளித்து புன்னகையில் பூக்க
சிலர் உற்சாகதில் மழையில் நனைய
பலர் உம்மென்று ஓடி ஒதுங்கி புலம்ப
எதையும் நினைவில் கொள்ளாத மழையே
பாரபட்சமின்றி
பகலலிரவு நேரமின்றி
நீயாக வந்து நீரால்
உடலை மட்டுமல்ல உள்ளத்தையும்
நனைத்துச் செல்லும் மழையே
உன் தீண்டளுக்காக என்றும்
ஏங்கும் இந்த நெஞ்சம்