25.01.2026(ஞாயிறு)இல், மும்பை, டோம்பிவிலி, குழந்தை இயேசு ஆலயத்தில், தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அமைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்வில், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் உதவித் தலைவர், கவிமணி இரஜகை நிலவன் அவர்கள் எழுதிய முகவரி தேடும் காற்று என்னும் நாவல் வெளியிடப்பட்டது. குழந்தை இயேசு ஆலயத்தின் பங்குத்தந்தை (PARISH PRIEST) அருட்பணி கால்டன் அவர்கள், நூலை வெளியிட, உதவித்தந்தை (Asst.Parish Priest) அருட்பணி ஐசக் ரவி அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆரவாரமாக நடந்த இந்த விழாவில் தமிழ் அறிஞர் பெருமக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க, விழா இனிதே நிறைவுற்றது.
செய்தி தொகுப்பு : கவிஞர் மாலதி இராமலிங்கம்,
புதுச்சேரி.
