27 .01 .2026 சென்னை மாதம்பாக்கத்தில் உள்ள சோகா இகெதா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் அதன் முதல்வர் முனைவர் மீரா முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் முனைவர் ராணி எலிசபெத் வரவேற்புரை வழங்கினார். உரத்த சிந்தனை சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் பா. மேகநாதன் அறிமுக உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாணவிகளின் பாடலரங்கம், பேச்சரங்கம் ,நடன அரங்கம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. குறிப்பாக திருநங்கை விலாஷ்னியின் நடனம் எல்லோரின் கவனத்தையும் கவர்ந்தது.
எழுத்தாளரும் உரத்த சிந்தனை சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான லதா சரவணன், அரிமா குரு ஆறுமுகம், ஸ்ருதிலய வித்யாலயாவின் முதல்வர் கலைமாமணி பார்வதி பாலசுப்பிரமணியன், உதயம் ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பட்டிமன்றப் பேச்சாளர் நகைச்சுவை நாவலர் புலவர் மா. இராமலிங்கம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வகையில் அற்புதமான அறிவுரைகளை வழங்கி , பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.


இந்த நிகழ்வில் ஓவியர் மணி, என் ஆர்.பாலசுப்பிரமணியன் , பிச்சம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
