100 ரூபாயில் உதகையை சுற்றிப் பார்க்க சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

 100 ரூபாயில் உதகையை சுற்றிப் பார்க்க சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.   அந்த பேருந்தில் பெரியவர் ஒருவருக்கு ரூ.100 கட்டணமும்,  சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

கோடை விடுமுறையை முன்னிட்டு உதகைக்கு ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா சென்று வருகின்றனர்.  இந்த நிலையில்,  உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக, கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோடை காலம் முழுவதும் சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும் குறைந்த கட்டணத்திலும் கண்டுகளிக்க சுற்று பேருந்து இயக்கப்படுகிறது.

இந்த பேருந்தில் பெரியர்வர்களுக்கு ரூ.100 கட்டணமாகவும்,  சிறியவர்களுக்கு கட்டணமாக  ரூ.50 ம் வசூலிக்கப்படுகிறது.   இந்த சுற்றுப்பேருந்தானது,  மத்திய பேருந்து நிலையம்,  தண்டர் வேர்ல்ட்,  படகு இல்லம்,  தாவரவியல் பூங்கா,  தொட்டபெட்டா,  பென்ச் மார்க் டி மியூசியம்,  ரோஜா பூங்கா வரை செல்லும்.

மேற்கண்ட கட்டணத்தை செலுத்தி பயண அட்டை பெரும் சுற்றுலா பயணிகள் மேற்கண்ட சுற்றுலா தலங்களில் தாங்கள் விரும்பும் நேரம் வரை பார்வையிட்டுவிட்டு மற்றொரு சுற்றுலா தளத்திற்கு வேறு ஒரு சுற்று பேருந்தில் கட்டணம் இன்றி அதே பயண அட்டை மூலம் பயனம் செய்யலாம்.  ஒரு நாள் முழுவதும் ஒரு சுற்றிற்கு இந்த அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...