வரலாற்றில் இன்று (22.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

நவம்பர் 22 (November 22) கிரிகோரியன் ஆண்டின் 326 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 327 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

498 – திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
1307 – ஐரோப்பாவில் உள்ள அனைத்து புனித வீரர்களினதும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு ஆணையிட்டார்.
1635 – சீனக் குடியரசின் இடச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
1718 – அமெரிக்காவின் வட கரொலைனாவில், பிரித்தானியக் கடல்கொள்ளைக்காரன் பிளாக்பியர்ட் அரச கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டான்.
1873 – பிரெஞ்சு நீராவிக் கப்பல் இசுக்காட்டியக் கப்பலுடன் அத்திலாந்திக் பெருங்கடலில் மோதி மூழ்கியதில் 226 உயிரிழந்தனர்.
1908 – அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
1922 – துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
1935 – பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.)
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள் அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை விடுவித்தன.
1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனியத் தளபதி பிரீட்றிக் பவுலஸ், ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக இட்லருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினான்.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சீனத் தலைவர் சங் கை செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.
1943 – லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1956 – 16-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் ஆரம்பமாயின.
1963 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சசு ஆளுநர் ஜான் கொனெலி படுகாயமடைந்தார். துணைத் தலைவர் லின்டன் பி. ஜான்சன் 36வது அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1974 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலத்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது.
1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து எசுப்பானியாவின் அரசராக யுவான் கார்லொசு எசுப்பானியாவின் அரசரானார்.
1977 – மீயொலிவேக கான்கோர்டு சேவையை பிரித்தானிய ஏர்வேஸ் இலண்டன் முதல் நியூயார்க் வரை ஆரம்பித்தது.
1986 – மைக் டைசன் தனது 20வது அகவையில் குத்துச்சண்டை வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1989 – மேற்கு பெய்ரூத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.
1995 – உலகின் முதலாவது முழுமையான அசைவூட்டத் திரைப்படம் டாய் ஸ்டோரி வெளியானது.
1995 – சினாய் தீபகற்பம், சவூதி அரேபியா பகுதிகளில் 7.3 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில், 8 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.
2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2003 – ஜோர்ஜியாவில் அரசுத்தலைவர் எதுவார்து செவர்துநாத்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அரசுத்தலைவரைப் பதவி விலகுமாறு கோரினர்.
2005 – செருமனியின் முதலாவது பெண் அரசுத்தலைவராக அங்கிலா மெர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
2007 – இலங்கை அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.
2012 – எட்டு நாட்கள் போருக்குப் பின்னர் காசாக்கரையில் அமாசிற்கும் இசுரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

பிறப்புகள்

1830 – ஜல்காரிபாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1858)
1839 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தமிழிசை அறிஞர் (இ. 1898)
1890 – சார்லஸ் டி கோல், பிரான்சின் 18வது அரசுத்தலைவர் (இ. 1970)
1898 – லயனல் ராபின்ஸ், பிரித்தானியப் பொருளியல் அறிஞர் (இ. 1984)
1904 – மரே ராஜம், தமிழகத் தொழிலதிபர், பதிப்பாளர், கொடையாளர் (இ. 1986)
1904 – இலூயீ நீல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 2000)
1939 – முலாயம் சிங் யாதவ், இந்திய அரசியல்வாதி
1943 – பில்லி ஜீன் கிங், அமெரிக்க டென்னிசு வீராங்கனை
1954 – திண்டுக்கல் ஐ. லியோனி, ஆசிரியர், மேடைப் பேச்சாளர்
1958 – ஜேமி லீ குர்திஸ், அமெரிக்க நடிகை
1966 – சஞ்சய் காத்வி, இந்திய திரைப்பட இயக்குநர்
1967 – பொறிஸ் பெக்கர், செருமானிய-சுவிசு டென்னிசு வீரர்
1967 – மார்க் ருஃப்பால்லோ, அமெரிக்க நடிகர்
1968 – ரஸ்மஸ் லெர்டெர்ஃப், பி.எச்.பி நிரல் மொழியைக் கண்டுபிடித்தவர்
1969 – மர்ஜானே சத்ரபி, ஈரானிய எழுத்தாளர்
1970 – மாவன் அத்தப்பத்து, இலங்கைத் துடுப்பாளர்
1984 – ஸ்கார்லெட் ஜோஹான்சன், அமெரிக்க நடிகை
1986 – ஆஸ்கர் பிஸ்டோரியஸ், தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரர்
1990 – கார்த்திக் ஆர்யன், இந்திய நடிகர்

இறப்புகள்

1718 – பிளாக்பியர்ட், ஆங்கிலேயக் கடல் கொள்ளைக்காரன் (பி. 1680)
1774 – ராபர்ட் கிளைவ், ஆங்கிலேய இராணுவ வீரர், அரசியல்வாதி (பி. 1725)
1907 – ஆசப் ஆல், அமெரிக்க வானியலாளர் (பி. 1829)
1944 – ஆர்த்தர் எடிங்டன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1882)
1963 – ஆல்டசு அக்சுலி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1894)
1963 – ஜான் எஃப். கென்னடி, அமெரிக்காவின் 35வது அரசுத்தலைவர் (பி. 1917)
1967 – சிதம்பரநாதன் செட்டியார், தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (பி. 1907)
1967 – தாரா சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (பி. 1885)
1974 – ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1908)
1988 – ரேமாண்ட் டார்ட், ஆத்திரேலியத் தொல்லியலாளர். புதைபடிவ ஆய்வாளர் (பி. 1893)
1997 – தி. சதாசிவம், தமிழகப் பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1902)
2011 – சுவெத்லானா அலிலுயேவா, உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)
2011 – லின் மர்குலிஸ், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1938)
2012 – பி. கோவிந்த பிள்ளை, இந்திய அரசியல்வாதி (பி. 1926)
2015 – சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி (பி. 1949)
2016 – எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர், இசைக்கலைஞர் (பி. 1930)
2016 – எம். ஜி. கே. மேனன், இந்திய இயல்பியலாளர் (பி. 1928)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (லெபனான், பிரான்சிடம் இருந்து 1943)
ஆசிரியர் நாள் (கோஸ்ட்டா ரிக்கா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!