சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் ரத்து..!
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் ஆகிய நகரங்களுக்கு தினமும் அதிகாலை 3.50 மணி முதல் இரவு 11.59 மணி வரை 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
முக்கிய நேரங்களில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், பிற நேரங்களில் 20 முதல் 25 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் இரு மாா்க்கமாகவும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
இதனால் சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இன்று காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படும் மற்ற ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் நேரத்திற்கு பதிலாக 5 முதல் 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
சில ரயில்களின் நேரம் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயங்கும் வகையில் மின்சார ரயில் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும். இதற்கேற்ப பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.