தற்போதைய செய்திகள் (21.11.2024)
தமிழ்நாடு’ பெயரின் உச்சரிப்பு மாறாமல், அப்படியே அமையும் வண்ணம் ஆங்கில வடிவத்தில் TAMIL NADU (டமில்நாடு) என்பதை ‘THAMIZH NAADU’ என அரசு ஆவணங்களில் இடம் பெற நடவடிக்கை எடுக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
நீங்கள் நலமா திட்டம் = முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் ஆய்வின்போது பொதுமக்களுடன் தொலைபேசியில் உரையாடுவார் என தகவல் அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து அமைச்சர்கள், துறை செயலாளர்களுடன் முதல்வர் இன்று ஆய்வு மகளிர் விடியல் பயணம், காலை உணவு, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு கடந்த மார்ச் மாதம், ‘நீங்கள் நலமா‘ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 10 சதவீதம் முதல் 29 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து பங்குகள் விலை கடும் சரிவடைந்தது. அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை 10 சதவீதம் சரிந்துள்ளது. அதானி போர்ட் பங்கு விலையும் 10 சதவீதத்துக்கு மேல் சரிந்து வர்த்தகமாகிறது. அதானி பவர் நிறுவன பங்கு விலை 11 சதவீதம் சரிவு ஆன நிலையில் அதானி எனர்ஜி நிறுவன பங்கு விலை 20 சதவீதம் சரிவடைந்தது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு விலை 16 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலை 12 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை 28 சதவீதம் சரிந்துள்ளது.
டெல்லியில் சற்று மேம்பட்டுள்ள காற்றின் தரம் அரசு ஊழியர்கள் 50% பேர் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால் காற்றின் தரத்தில் முன்னேற்றம். கடுமையான அளவில் இருந்து மிகவும் மோசமான அளவுக்கு முன்னேறிய காற்றின் தரம் டெல்லியில் தற்போது காற்றின் தர குறியீடு 379 ஆக பதிவு.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 135 மருத்துவ இடங்களுக்கு நவ.25ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு – மருத்துவக் கல்வி இயக்ககம். அன்னை மருத்துவ கல்லூரிக்கு 50 மருத்துவ இடங்களும், எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிக்கு 50 இடங்கள் கூடுதலாக ஒதுக்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு.
தமிழ்நாட்டில் நவ.26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவ.25, 26 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நவ.25ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.