தற்போதைய முக்கியச்செய்திகள்

 தற்போதைய முக்கியச்செய்திகள்

சபரிமலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களுக்கு உதவி செய்ய கன்னியாகுமரி மாவட்ட  இந்து அறநிலையத்துறை  இரண்டு அதிகாரிகள் இருவர்  அடுத்த வாரம் முதல் பணி அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு  சுவாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழகத்திலிருந்து சபரிமலை வரும் பக்தர்களுக்கு உதவும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இரண்டு   இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் அடுத்த வாரம் முதல் சபரிமலையில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் ஏதேனும் உதவி தேவைப்படின்  இவர்கள் உதவி செய்வார்கள்.  என்றும் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக 51 சமுதாய கூடங்கள் உள்ளன. இவற்றில் குடும்ப விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள விரும்பும் பொதுமக்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வாடகையும் மிகக் குறைவு என்பதால் பொதுமக்கள் பலரும் விரும்புகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக இருப்பதாக பாதிக்கப்பட்டோர் புகார் கூறுகின்றனர். குடியிருப்பாளர்கள் அழைப்பதற்காக உதவி பொறியாளர்களின் மொபைல் எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்பு மட்டுமே. அங்கு நேரில் சென்றால் மட்டுமே, புரோக்கர்கள் யார், அவர்களது அதிகாரம், செல்வாக்கு என்ன என்பதை அறிய முடியும். குறிப்பாக, மாதவரம், மணலி, கே.கே. நகர் மற்றும் சி.ஐ.டி., நகர் ஆகிய இடங்களில் உள்ள நான்கு சமுதாயக் கூடங்களுக்கு முன்பதிவு செய்ய புரோக்கர்களுக்கு கட்டாயமாக பணம் கொடுக்கும் நிலை நிலவுகிறது என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

25% கனடா பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பணவீக்கம், உயர்ந்து வரும் நிலையில், வீட்டு வாடகைகள் மற்றும் மளிகை பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஆகும் செலவு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளான உணவைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றன. 90% க்கும் அதிகமானோர் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்ய, தங்கள் மளிகைச் செலவைக் குறைத்துள்ளனர். பல குடும்பங்கள் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் மலிவான விலையில் சத்துள்ள உணவை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெற்றோர் தங்கள் உணவு அல்லது அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக போராடுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.35 மணிக்கு, பூமிக்கு அடியில் 82 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு ஆகியுள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கை சந்தை (Natural Bazaar) நடைபெற்று வருகிறது. இந்த வாரம் 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) இயற்கை சந்தை நடைபெறவுள்ளது. இந்த இயற்கை சந்தையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஒலை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் கிடைக்கும். மேலும் இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் கிடைக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் இயற்கை சந்தையை பார்வையிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை வாங்கி மகிழலாம்.

நேற்று சீமான் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறி இருந்தது. அதனைத் தொடர்ந்து, பலரும் பல கதைகளை பேசி வந்தனர், குறிப்பாக சீமான் அரசியல் நிமித்தமாக ரஜினியை சந்தித்து பேசியிருப்பார் என்றெல்லாம் பேசி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை சீமான், தான் ரஜினியிடம் என்ன பேசினார் என்பதை வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது குறித்து சீமான் பேசிய போது, “ரஜினியுடன் திரையுலகம், அரசியல் குறித்து பல விஷயங்களை பேசினேன். ரஜினிகாந்தை சந்தித்ததே ஒரு அரசியல்தான். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. அவர் வயதில் என்னைவிட மூத்தவர், இதனால் என்னை விட அதிக அரசியல் தலைவர்களுடன் பழகி இருப்பார். அரசியல் களம் என்பது ஒரு கொடூரமான ஒரு ஆட்டம், இது அவருக்கு சரியாக வராது என்று அவரிடமே நான் கூறினேன். அவருடன் நிறைய பேசினேன் அனைத்தையும் பகிர முடியாது”, என சீமான் கூறினார்.

தமிழ்நாட்டில் 3வது பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 5.57 லட்சம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஐடி வளாகத்தின் வாயிலாக 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

நிலவுகளில் உள்ள கடல்களை ஆராய ஸ்விம்மிங் ரோபோக்களை உருவாக்கியது NASA! வியாழன் மற்றும் சனி கோள்களின் நிலவுகளில் மறைந்திருக்கும் பெருங்கடல்களை ஆராய்வதற்காக, ஸ்விம்மிங் ரோபோக்களை NASA அறிமுகம் செய்துள்ளது ‘SWIM’ எனப்படும் தனது எதிர்காலத் திட்டத்திற்காக செல்போன் அளவிலான மிக சிறிய ரோபோக்களை உருவாக்கி NASA சோதித்து வருகிறது அந்த கோள்களின் நிலவுகளில் உள்ள நீர் இருப்புகள் வாழ்க்கைக்கு ஏற்றதாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...