தாய்மை

தன் உயிரின் உயிரை
தன் உயிருக்குள் உரு கொடுத்து
மசக்கையின் மயக்கத்தில் மனம் மகிழ்ந்து

கணவனின் உள்ளங்கையில் – குழந்தையின் 
உயிரோட்டத்தை உணரச்செய்து 
உள்ளம் நெகிழ்ந்து
துடிப்பில் துவண்டாலும்
ஆவலில் ஆசையோடு காத்திருந்து  

பேரலையாய் வரும் வலியை கடந்து
பிரசவக்கடலில் உயிர் முத்தெடுக்கும்
பெண்மையின் தாய்மை
பெரும் வரம் பெற்ற பேரின்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!