சமையல் குறிப்பு
முறுக்கு: தேவையான பொருள்கள்: பச்சஅரிசி -1படி (3/4kg) வெள்ளை உளுந்து-100g வெண்ணை or டால்டா-100g பெருங்காய தூள்- 1/4tsp உப்பு -தேவையான அளவு செய்முறை: பச்ச்அரிசியை நன்கு கழுவி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். வாணலியில் உளுந்து போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.பின் மெஷினில் கொடுத்து நன்கு பவுடர் போல் அரைத்து கொள்ளவும். முறுக்கு மாவை நன்கு சலித்து கொள்ளவும்.அதில் உப்பு எள்ளு வெண்ணெய் போட்டு முதலில் எல்லா மாவிலும் வெண்ணெய் படும்படி நன்கு மாவை திரித்து கொள்ள வேண்டும்.பின் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.முறுக்கு உரலில் மாவு போட்டு முறுக்கு பிழிந்து எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு *எப்போதும் மாவில் வெண்ணெய் போட்டு முதலில் திரிக்கும் போது முறுக்கு நீண்டநாட்கள் மொறுமொறு என்று இருக்கும். *முறுக்கு எண்ணெயில் போடும் போது சில நேரங்களில் பிரிந்து போகும்..அதற்கு மாவை எப்போதும் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்தால் முறுக்கு எண்ணெயில் பிரியாது