சித்திரை சிறப்பு ரெசிபிகள் 1
. மாங்காய் பூசணிக்காய் பச்சடி
******************************** தேவையான பொருள்கள்;-
பூசணிக்காய் – ஒரு கப் (நறுக்கியது) மாங்காய் – ஒரு கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் – 3 (வட்டமாக நறுக்கியது), உப்பு – தேவையான அளவு. தேங்காய் துருவல் – அரை கப் மிளகாய் வற்றல் – ஒன்று சீரகம் – அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி தாளிப்பதற்கு:- எண்ணெய் – ஒரு தேக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை:- பூசணிக்காய் மற்றும் மாங்காயை பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். அடுப்பில் குக்கர் வைத்து பூசணிக்காய், மாங்காய், பச்சைமிளகாயுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். காய்கள் வெந்ததும் கரண்டியால் நன்கு மசிக்கவும். அதில் அரைத்து வைத்திருக்கும் விழுதினை ஊற்றி பச்சை வாசனை போகும்வரையில் கொதிக்க விடவும். தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பச்சடியில் சேர்க்கவும்.
சுவையான பூசணிக்காய் மாங்காய் பச்சடி தயார்
. 2.*வேப்பம்பூ ரசம்* *****************
தேவையானவை:-
வேப்பம்பூ – 1டேபிள் ஸ்பூன் புளி – சிறு நெல்லிக்காய் அளவு உப்பு – தேவையான அளவு வெல்லம் – 1/2 டீஸ்பூன் மஞ்சள்பொடி – 1 சிட்டிகை தாளிப்பதற்கு தேவையானவை:- நெய் – ஒரு டீஸ்பூன் கடுகு ,உளுத்தம்பருப்பு- தலா ஒரு டீஸ்பூன் காய்ந்தமிளகாய்-3 துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பெருங்காயம் – ஒரு சிட்டிகை

செய்முறை:-
வேப்பம்பூவை வெறும் கடாயில் லேசான தீயில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, வெல்லம், மஞ்சள்பொடி சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் பாத்திரத்தில் நெய்விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கடைசியில் சிறிது நெய் விட்டு வேப்பம்பூவை வதக்கி ரசத்தில் சேர்க்கவும். வேப்பம்பூ சேர்த்தவுடன் ரசத்தை இறக்கிவிடவும்.
கமகமக்கும் ரசம் தயார்.
3. சதசதயம் கேரளா ஸ்பெஷல்
*********************************
தேவையானப்பொருள்கள்:-
அரிசி – 1 கப் பயத்தம்பருப்பு – 1/2 கப் வெல்லம் துருவியது – 1 கப் ஏலக்காய்த்தூள் – சிறிதளவு தேங்காய்ப்பால் – 1கப் நெய் -1ஸ்பூன் முந்திரி-10
செய்முறை:-
தண்ணீரில் அரிசியையும் பருப்பையும் ஒன்றாகச் சேர்த்துக் குழைய வேகவைக்கவும். வெந்தபின் துருவிய வெல்லம் சேர்த்து முழுவதும் கரையும்வரையில் குறைந்த தணலில் வேகவிடவும். கடைசியில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு நிமிடம் வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் ஏலக்காய்த்தூள் தூவி பரிமாறவும்.

