இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்


சித்திரை மாதத்தின் சிறப்பும்,
சித்திரையில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று தெரியுமா?
ஏப்ரல் 14 திங்கள்கிழமை சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக வருவது சித்திரை மாதம்
. நம்முடைய ஜோதிட முறை சூரியனை மையமாக கொண்டு கணக்கிடப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது ஒரு மாதம் தொடங்கும். அந்த வகையில் சூரிய பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலம் தான் சித்திரை மாதமாகும்.
சித்திரை மாத சிறப்புகள்
சித்திரை மாதம் தமிழ் மாதத்தின் முதல் மாதம். இந்த மாதத்தின் தொடக்கத்தில் சூரியனை வழிபடக்கூடிய சிறப்புமிக்க நாளாக கொண்டாடப்படுகிறது. சித்திரை தொடக்க நாள் வருடத்தின் தொடக்க நாள் என்பதால் அன்றைய தினம் அந்த வருடத்திற்குரிய பஞ்சாங்கத்தை வாசிப்பது அவசியம்.
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துவது போல நம் முன்னோர்கள் இந்த தமிழ் வருட பிறப்பு நாளில் வேப்பம் பூ பச்சடி செய்வது வழக்கம். வேப்பம் பூ உடன், வெல்லம், புளி, உள்ளிட்டவை சேர்த்து செய்யப்படும் இது இனிப்பு, கசப்பு, புளிப்புடன் இருக்கும். இது வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் விதமாக இருக்கின்றது
. பெளர்ணமி பூஜை, வழிபாடு செய்யும் முறை
சித்திரை பௌர்ணமி இந்த மாதத்தில் வரக்கூடிய ‘சித்ரா பெளர்ணமி’ மிக விசேஷமானது. இந்த சித்ரா பௌர்ணமி அன்று நிலவின் முழு வெளிச்சத்தால் பூமியின் சில பகுதியில் ஒரு வகை உப்பு வெளிவரும், அது பூமி நாதம் என சித்தர்கள் அழைப்பார்கள். இது மருத்துவ துறையில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
சித்திரை மாத திருவிழாக்கள் :
சித்திரை திருவிழா என்றதும் நம் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா. கிட்டத்தட்ட 12 நாட்கள் நடக்கக் கூடிய இந்த திருவிழா, மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்டவையும், கள்ளழகர் எதிர்சேவை, வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும், தசாவதாரம் உள்ளிட்டவை அடங்கியது.
இந்த திருவிழாவை காண மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். சைவ, வைணவ சமயத்தின் ஒற்றுமையைக் காட்டுவதாக இந்த திருவிழா அமைகிறது. அட்சய திருதியை எதை செய்தாலும் பல மடங்கு பலன் பெறக் கூடிய நாளாக அட்சய திருதியை பார்க்கப்படுகிறது.
இந்த பொன்னான நாள் சித்திரை மாதத்தில் தான் வருகிறது. நாம் இந்த அட்சய திருதியை நாளில் செய்யக் கூடிய தான தர்மங்கள், பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணம் உள்ளிட்டவை நமக்கு பல மடங்கு பலனை தர வல்லது.
இந்த தினத்தில் அரிசி, கோதுமை, தானியங்கள். பழங்கள். தயிர், மோர், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதால் நமக்கு மன அமைதியும், செல்வமும் பெருகும்
. சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடப்பது வழக்கம்.
சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணம் சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள்,
புது வருடத்தை வரவேற்பதைப் போல் வரவேற்கப்படக் கூடிய நபர்களாக இருப்பார்கள். அனைவராலும் விரும்பப்படக் கூடிய நபர்களாக இருப்பார்கள். ஒரு காரியத்தை எடுத்தால்
அதில் வெற்றி அடைய தன் முழு முயற்சிகளை ஈடுபடுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள்.
