தமிழ் புத்தாண்டு தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தமிழர்கள் பண்டிகை ஆகும்.
இது சித்திரை மாதத்தின் முதல் நாளையும் தமிழ் நாட்காட்டியின் தொடக்கத்தையும் குறிக்கிறது. சித்திரை முதல் நாள் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும்.
சூரிய பகவான் மேஷம் துவங்கி மீனம் வரை உள்ள 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கின்றோம்.ஆங்கில நாட்காட்டியின் படி இது ஏப்ரல் மாதத்தின் 14ஆம் தேதி வருகிறது.
வீடுகள் தோறும் மாவிலை, தென்னை குருத் ததோலைகளின் தோரணங்களும், வாசல் தோறும் வண்ண வண்ண கோலங்கள், மனங்களில் மகிழ்ச்சி பொங்க புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசி பெறுவோம்.
கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து இறைவனின் அருளை வேண்டுவோம். ஒரு சிலர் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு சடங்குகளையும் செய்கிறார்கள். பிரம்மதேவன் இந்த நாளில் தான் உலகத்தில் உயிரினத்தை படைத்தார் என்றும் இந்திரன் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பூமியில் கொண்டு வந்தார் என்றும் நம்பப்படுகிறது.
. பண்டிகையை முந்தைய நாள் இரவு பூஜை அறையில் ஓர் தட்டில் முக்கனிகள், பூக்கள், வெற்றிலை, பாக்கு,ரூபாய் அல்லது நாணயங்கள், தங்கம் அல்லது வெள்ளி, இனிப்பு பலகாரங்கள், முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைத்து விட வேண்டும்.
காலையில் தூங்கி எழுந்தவுடன் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அந்தத் தட்டில் உள்ள மங்களகரமான பொருட்களை பார்த்து கண்ணாடியில் தான் முகத்தை பார்த்துவிட்டு மகாலட்சுமியை நினைத்து தட்டைத் தொட்டு வணங்கினால் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் இந்த ஆண்டு முழுவதும் தங்களுக்குத் தரும் என்பது வழி வழியாக வந்த நம்பிக்கை ஆகும்.
புது வாழ்வின் ஆரம்பம் வேப்பம்பூவின் கசப்பும் மாங்காய் என் இனிப்பும் கலந்து செய்த பச்சடி இது வாழ்வின் பல சுவைகளை நமக்கு உணர்த்தும்
. இதே நாளில் அசாமில் பிஹு பஞ்சாபில் வைசாக்கி கேரளாவில் விஷு மற்றும் மேற்கு வங்கத்தில் பொய்லா மற்றும் பொய்சாக் போன்ற பிற இந்திய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன.
சித்திரை முதல் நாள் ஒரு முக்கியமான கலாச்சார மற்றும் ஆன்மீக பண்டிகை ஆகும் இது புதிய நம்பிக்கைகள் புதிய தொடக்கங்கள் புதிய குறிக்கோள்களுடன் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கான ஒரு இனிய தருணம் ஆகும்.
– Divanya Prabhakaran
