மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 8 | லதா சரவணன்

 மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 8 | லதா சரவணன்

எட்டாவது வி​ளையாட்டுகள்

மறுநாள் மறந்து​ போன மரபு வி​ளையாட்டுகள்

சொல்லியடிப்பேனடி அடிச்சினேன்னா நெத்தியடிதானடி…படிக்காதவன் படப்பாடலில் ரஜினி அம்பிகாவின் நடனத்தை ரசித்துக் கொண்டு இருந்த மாலியின் முன் ரெளத்திரமாய் வந்து நின்றான் வாசு.

தடிமாடு மாதிரியிருக்கே உனக்கே இன்னமும் கல்யாணம் ஆகலை அதுக்குள்ளே ஆம்பிளைப் பையன் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி அம்மாகிட்டே போட்டு கொடுத்திருக்கே கொழுப்பா உனக்கு வழக்கம்போல சண்டை துவங்கிவிட்டதற்கு ஆதாரமாய் வாசு மாலினியின் முன்பு சிலிர்த்துப் போய் நின்றான்.

இப்ப என்னடா ஊரிலே திருவிழா மாமா வந்திருக்காருன்னு பொண்ணு தயாரா இருக்கு இவன்தான் பிடி கொடுக்க மாட்டேன்கிறான்னு ஆன்ட்டி கவலைப்பட்டாங்க அதான் உங்க பிள்ளை சும்மா உதார் விடறான் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சிங்களாவே இருக்கிறதுன்னு தினமும் என்கிட்டே அழுது புலம்பறான்னு சொன்னேன்.

கழுதை அதுதான் ஏன் சொல்றேன்னு கேட்டேன் நான் வந்து உன்கிட்டே கல்யாணம் வேணுன்னு அழுதேனாக்கும்

இல்லையா பின்னே ஏண்டா ரோட்ல போற ஒரு பொண்ணை விடறதில்லை பத்தாததுக்கு உன் போன் புல்லாவே பொம்பிளைப் பிள்ளைங்க நம்பர்தான்

அவங்க எல்லாம் பிரண்டுடி

இப்போயென்ன கல்யாணம் பண்ணிவைன்னு நீ கேட்கறதுக்கு பதில் நான் கேட்டு உனக்கு நல்லது பண்ணியிருக்கேன் போ போய் வேலையைப் பாரு நைட்டு ஊருக்காமே மாமாவை பார்த்தேன் என் மருமகனை கூட்டிட்டுப் போய்தான் தீருவேன்னு பிடிவாதமா இருக்கார்.

நான் போகப்போறதில்லை

ஒருவேளை காளை அடக்குனா கல்லைத் தூக்கினாத்தான் பொண்ணுன்னு ஏதாவது பிரச்சனை இருக்கோ….?!

அப்படியிருந்தாக்கூட பரவாயில்லை அதைவிடு காளை அடக்க கல்லைத் தூக்க முடியாதுன்னு சொல்றீயா ?

வாசு அந்தக் காலத்திலே நம்ம தமிழ்நாடுதான் வீரத்துக்கு பேர் போனதுன்னு சொல்லுவாங்க கல்யாணம் பண்ணிக்கிறது கூட வீரனா இருக்கணுமின்னு பெண்கள் விரும்புவாங்களாம். இப்போ உள்ள ஆட்கள் எல்லாம் இந்த வீரவிளையாட்டை எல்லாம் மொபைல் போனிலேயே விளையாடுறீங்க,

உண்மையைச் சொல்லு எனக்குத் தெரிந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது பையன் என்ன படிச்சிருக்கான், கார் ஓட்டத்தெரியுமா சொந்த வீடு எவ்வளவு பர்சனாலிட்டி என்ன ? வாரம் ஒருதடவை சினிமா பார்க் இங்கெல்லாம் கூட்டிப்போவானான்னுதான் கேட்டாங்களே தவிர கல்லையும் மண்ணையும் தூக்கச் சொல்லலை, மாப்பிள்ளைக்கு கெட்டபழக்கம் இருக்கான்னு கூட நினைக்கலை இப்போ பெண் கொடுக்கிறவங்க பையனோட அழகையும், பணத்தையும் தான் அதிகம் எதிர்பார்க்கிறாங்க

நீதான் தரகு வேலை பார்க்குறே உனக்குத்தான் தெரியும் என்று சொல்லி தலையில் ஒரு குட்டு வாங்கிக் கொண்டவள்.

அந்தக் காலத்திலே ப்ளே ஸ்டோர் எல்லாம் ரோட்டுக்குள்ளேதான் கிடந்தது இப்போ அப்படியா ? ஒரு பெண் பார்க்கப் போகும் போது மாப்பிள்ளைக்கும் நிறைய டெஸ்ட் வைப்பாங்க முதல்ல இளவட்டக் கல்லைத் தூக்குவது இம்மாதிரி விளையாட்டுக்கள் எல்லாமே திருவிழாக் காலங்களில் தான் பெரும்பாலும் நடக்கும். அங்கே தான் வீட்டுப் பெண்கள் வெளியேவே வருவாங்க அலங்காரங்களோடு,,,,

உன்னைப் போய் நல்லவன்னு உங்கம்மா நம்புறாங்க பாரு…. திருவிழாக்கால விளையாட்டுக்கள் பற்றி சொல்லு வாசு….

அது கெடக்கு நிறைய நீ பண்ண கூத்தில் அம்மா ஒரு டம்ளர் காபி கூட தரலை சூடா போய் காபி எடுத்திட்டு வா

செவிக்கு உணவில்லாத போதுதான் வயிற்றுக்குப் போடணும் அதனால முதல்ல விஷயத்தை சொல்லு

போலீஸ் ஸ்டேஷன்ல ரவுடிகளை எல்லாம் முட்டியை உடைச்சிடுவேன்னு சொல்வாங்க அந்த பேர்ல ஒரு தமிழ் விளையாட்டு வட இருக்கு. இப்போ கூட ரஜினியும் அம்பிகாவும் சொல்லியடிப்பேனடி – ன்னு ஆடினாங்களே அந்த விளையாட்டுக்குப் பேருதான் முட்டி உடைத்தல் அல்லது உரியடின்னு பேரு.

இந்த விளையாட்டு பொங்கல் மற்றும் கிருஷ்ண ஜெயந்தியில் விளையாடுவாங்க. பழைய படங்களில் பார்க்கலாம் இப்போ கிராமப்புற படங்களில் நிச்சயமா இந்தக் காட்சிகள் இருக்கும் வெண்ணிலா கபடிக்குழுவில் கூட காமெடிக்காக இந்தக் காட்சியைச் சேர்த்திருப்பாங்க. முட்டி என்பது பானையைக் குறிக்கும் கண்ணாமூச்சி மாதிரி கண்ணைக் கட்டி கையில் ஒரு நீளமான மூங்கில் கம்பைக் கொடுத்து சுத்திவிடுவாங்க விளையாடுகிறவங்க தனக்கு முன்னால் உயரமான கொம்பில் கட்டப்பட்டுள்ள உரியையை அடிக்கணும். இவங்க அடிக்கும் போது ஒரே இடத்தில் நிற்காம அதை மேலும் கீழும் அசைப்பாங்க கவனம் சிதறடிக்க ஊர்லே எல்லாரும் கேலியும் கிண்டலும் செய்து இடத்தையே கலகலப்பா ஆக்கிடுவாங்க சில நேரம் மஞ்சதண்ணி ஊற்றி விளையாடுபவர்கள் மேல ஊற்றிகிட்டே குறி பார்த்து அடிக்க சொல்லுவாங்க.

மஞ்சள் தண்ணி ஒரு தனி விளையாட்டு இல்லை ஆமா திருவிழா காலங்களில் நேர்த்திக்கடன் செலுத்தும் விழாவில் தீமிதி தீச்சட்டியும் இவை இரண்டும் ஒன்று அக்னி ஏந்தி வலம் வந்து கோவிலில் அம்மனை வழிபட்ட பிறகு நெருப்பில் இருக்கும் அம்மனை குளிர்விக்க பால்குடமும், இந்த மஞ்சள் நீராட்டு விழாவும் செய்வது வழக்கம். தன்னோட முறைப்பொண்ணு பையன் மேல மஞ்சத்தண்ணி ஊற்றி விளையாடுவது சுவாரஸ்யமா இருக்கும்.

உரியடியில் உள்ள கலயத்தில் தயிர் கட்டப்பட்டு இருக்கும் சிலநேரம் பானைக்குள் ஏதாவது பரிப்பொருள் கூட இருக்கும். அது முழுக்க மஞ்சள்தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும் இந்த போட்டியில் சரியாக பானையை உடைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.

உரியடிக்கு முன்னாடி வழுக்கு மரம் ஏறுதல் என்ற விளையாட்டும் உண்டு. பிராசஸ் என்னவோ உரியடிமாதிரி பெரிய கம்பில் பானைகட்டி அதில் தயிர் கலயத்தோடு பரிசுப் பொருளும் வைப்பதுதான் இந்த விளையாட்டின் முறைதான் வேறு

அதென்னவோ….?!

நல்லா வளர்ந்த ஒரு மரத்தின் மேல் பட்டையை உரித்து, கடுகு, ஆரியம், ஊளுந்து மாவு, கிரீஸ் இதையெல்லாம் கலந்து மேலிருந்து கீழ்வரை மரத்தில் தடவி வழுவழுன்னு வைச்சிருப்பாங்க. இது யாதவர் குல மரபு விளையாட்டு, மரத்தில் ஏறும்போது அவர்கள் மீது தண்ணீரை அடிப்பார்கள். இதனால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணீரும் சேர்த்து ஏறியவர் வழுக்கிக் கீழே வருவர். அதனையும் மீறி மரத்தின் உச்சியில் பொருளையோ பண முடிப்பையோ எடுக்க வேண்டும். அப்படி எடுப்பவர் வெற்றி பெறுவார்கள்

இதேமாதிரி தான் ஒரு வீர விளையாட்டுதான் இளவட்டக் கல். கிராமத்தில் திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண்களுக்கு இந்த விளையாட்டு இளவட்டக் கல்லைத் தூக்கும் ஒருவர் அந்த பாரத்தை தாங்குவதைப் போல வாழ்க்கையின் பாரம் முழுவதையும் தாங்கும் பலமுடையவர் என்று கூறுவார்கள்.

முற்றும்.

முந்தையபகுதி – 7

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...