மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 7 | லதா சரவணன்

 மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 7 | லதா சரவணன்

ஏழாவது வி​ளையாட்டு

இரண்டு மூன்று நாட்களாகவே மாலினியைக் காணவில்லை, எப்போதும் வாசு வாசு என்று தன்னையே சுற்றிக் கொண்டிருப்பவளின் வருகை இல்லை என்றதும் சற்றே வெறுமையை உணர்ந்த வாசு எங்கே போயிருப்பாள் என்று அவளின் வீட்டிற்கே நேராகப் போய் விட்டான். மாலினியின் அறைக்குள் இருந்து வித்தியாசமான ஒலிகள் எழுந்தது. கதவைத் திறந்த போது வியர்க்க விறுவிறுக்கஅவள் ஏதோ ஒரு பயிற்சியில் ஈடுபட்டு இருந்தாள்.

மாலி என்ன பண்றே ?

நேத்து பட்டாசு படம் பார்த்தேன் அதில் நம்ம தமிழர்களின் அழிந்து போன கலையான அடிமுறைப் பற்றி சொல்லியிருந்தார்கள் சிநேகா என்னமா சண்டை போட்டாங்க தெரியுமா ? அதனால அதை பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று அவள் சொல்லி முடிக்கவும் அடக்கமாட்டாமல் சிரித்தான் வாசு.

பேய், செண்டிமெண்ட், காதல்ன்னு ஒரு படம் ஹிட்டானா அதைப் போலவே படம் எடுப்பவர்களைப் போல உனக்கும் இப்போ அதைமாதிரி அடிமுறை பீவர் வந்திட்டது. சரி முதல்ல அடிமுறைன்னா என்னன்னு தெரியுமா ?

சொல்லுங்க என்சைக்ளோபீடியா என்றவளின் தலையில் ஒரு குட்டு குட்டிவிட்டு. சிலம்பம் தெரியுமில்லை, அதற்கு முன்னோடிதான் இந்த அடிமுறை அதன் பெயர் அடிதட, அதாவது அடி முறையும், தடை முறையும் சேர்ந்த சொல்தான் அடிதட. ஒருவரை ஒருவர் அடிப்பதையும் அடிபடுவர் அதை தடுப்பதையும் கொண்ட தற்காப்பு கலை நாளடைவில் பேச்சு வழக்கில் அடிமுறையாகிவிட்டது. தமிழர்களின் வீர விளையாட்டில் முதன்மையானது அடிமுறை.

பட்டாசு நாசர் மாதிரின்னு சொல்லு ?!

இதுக்கும் திரைப்படம்தான் உதாரணமா ?

பின்னே கேன்சர்ன்னு ஒரு வியாதியிருக்கு அதுவந்தா செத்துபோயிடுவாங்கன்னு சினிமாலாதானே தெரிந்து கிட்டோம். இவ்வளவு ஏன் ?

அதன்பிறகு வளரி என்னும் வாள் பயிற்சியைப் பேசி வந்த படம்தான் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா, கதாநாயகனின் முப்பாட்டனின் வீரத்தை பறைசாற்றும் போர்முறையே வளரி என்றும், 300அடி தூரத்தில் உள்ள எதிராளியை வீழ்த்தும் அளவிற்கு வளரி வீரியம் மிக்கது என்றும் தெரிந்தது. அதே போல அடிமுறை என்னும் போர்கலைப் பயிற்சியின் மறுபதிப்பாக வந்திருக்கிறது பட்டாசு.

பட்டாசா பொறியாதே ? மாலி எல்லா நாடுகளுமே தங்களுடைய வரலாற்றை தனக்கு அடுத்து வரும் இளம் சந்ததியினருக்கு கற்றுத் தருகிறது ஆனால், நம்முடைய இளவல்களுக்கு அதை எப்போதாவது வெளிவரும் சினிமாக்கள் கற்றுத் தருகிறது. ஏழாம் அறிவு படத்தில் நாம் மறந்து போன மூலிகைகள் மூலம் அதை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் உயிர்காக்கலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் சூரியாவின் மூலம் அடையாளம் காட்டியபின்னரே சீன தேசத்திற்கு சென்ற பல்லவ இளவல் போதி தர்மருக்கு சிலை வைத்திருக்கிறார் அங்கே அவரை கடவுளாக போதிக்கிறார்கள் என்றே நமக்கு தெரிந்தது. அதன்பிறகு வரலாறு சில காலங்கள் புரட்டிப் பார்க்கப் பட்டு மறுபடியும் பொட்டிக்குள் அடங்கிய பாம்பாய் சுருண்டு போனது.

நமது பாராம்பரியம் இன்னும் இன்னும் தொன்மை கொண்டது என்பதை விளக்க வரும் இம்மாதிரியான படங்கள் ஆறுதல் அளிக்கிறது. சண்டைக் காட்சிகளில் புதுப்புது உத்திகளைக் கையாள்வது இப்போதை பேஷன் பழங்காலத் திரைப்படங்களில் சப்தமே இல்லாமல் எதிராளியை குத்துவார்கள். அதன் பிறகு ஒரு ஆட்டோமேட்டிக் கதவை திறக்கும்போது வரும் பிளக் என்ற ஒலி சண்டைக்காட்சிக்கு பயன்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் படங்களில் கத்திச்சண்டைக்கும், சிலம்பத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதன்பிறகு வந்த சில கதாநாயகர்களின் படங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலம்பச்சண்டையும், வாள் சண்டையும் இடம் பெற்றது. பாக்கியராஜ் அவர்களின் தூறல் நின்னு போச்சு படத்தின் சிலம்பச் சண்டைக் காட்சியை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் வெகுவாக பாராட்டியதாக செய்திகள் வெளிவந்தது.

ரஜினி கமல் காலங்களில் சண்டைகாட்சிகளில் டிஷ்யூம் என்ற புது ஒலியோடு புதுப்புது யுக்திகள் சிவா படத்தில் சிலேட் சண்டை, தொடாமல் அடித்துக் கொள்வது, விஜயகாந்த் ஒரு படி மேலயே போய் பறந்து பறந்து விளாசினார். அவர் படத்தில் சண்டைக்காட்சிகளில் மார்வா என்ற ஒலி வரும். இப்படியாக மாறி மாறி ஒலிகள் தேய்ந்து போனது. 90களில் அதிகம் தெருவில்தான் பிள்ளைகள் விளையாடுவார்கள் அப்போது ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சினிமாவில் அடித்தால் மட்டும் சப்தம் வருகிறது நாம அடிச்சா ஏண்டா சப்தம் வரலைன்னு கேள்விகள் எழுப்பியது வியப்பாய் இருந்தது. ஆனால் 20களில் ஒரு திரைப்படம் வந்தால் அந்த திரைப்படம் எந்த மொழியின் காப்பி எந்த ரைடக்டர், மியுசிக்கல் என்று நொடியில் தேடி எடுத்துவிடுகிறார்கள். மூடிவைத்த பொருளுக்குத்தான் ஈர்ப்பு அதிகம் அப்போதைய எதையும் உணராத 90களின் காலம் வரமே. அப்படியெனில் நமது வரலாறு எத்தனை சுவையானதாக இருக்கும். அதை தேடிப் படியுங்கள் நண்பர்களே.

அப்படி வரலாற்றில் இருந்து தற்போது மறைக்கப்பட்டு இருக்கும் ஒரு வீர விளையாட்டு தான் சுருள்பட்டை, எளிதில் வளையக்கூடிய ஒரு உலோகப்பொருள். சுமார் 3 முக்கால் அங்குல அகலமும், நான்கு அல்லது ஐந்தரை நீளமும் உடைய இரும்பு சவுக்கைப் போன்றது எதிராளியின் உடலை பாளம் பாளமாக வெட்டும் திறனை கொண்டது.

எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு பாட்ஷாவில் ரஜினி சொல்வதைப் போல ஊருக்குத் தகுந்தாற்போல இதன் பெயரும் மாறுபடுகிறது. கேரளத்தில் வடகளறி முறைப்படி உருமியாகவும், தென் களறி முறைப்படி சுட்டுவாள் என்றும். மலையாளத்தில் சுழலும் வாள் எனவும், தென் தமிழகத்தில் தற்காப்புக் கலைகளான வர்மக் கலை மற்றும் குத்துவரிசை போன்ற பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்டது இந்த வாள்.

அருந்ததி படத்தில் எதிராளியின் முன் எந்த ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக நீ நின்றாலும் உன்னை இந்த நடனம் காக்கும் சப்தவேத நாட்டியம் போர் முறையில் தான் உருவாக்கப்பட்டது. சில நாட்களுக்கு மன்னால் வெளியான சைரா நரசிம்ம ரெட்டியில் கூட தமன்னா இறக்கும் முன்பு இதே நடனத்தை போர் முறையாக ஆடியிருப்பார். கலகலப்பு படத்தில் சந்தானத்தில் அறிமுகக் காட்சியில் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி சண்டையிடுவதைப் போல நடித்திருப்பார்.

மிகவும் எளிதாக இடுப்பில் ஒரு பெல்ட்டைப் போல கொண்டு செல்லாம் சுருள்பட்டையை, தனக்கு நேரும் ஆபத்தில் இருந்து காத்து கொள்ள சிறு துரும்பைக் கூட தமிழன் பயன்படுத்தியிருக்கிறான் அதுவும் பிரயோஜனமாக. இருவரும் கைகுலுக்கிக் கொண்டு அடிமுறைப் பயிற்சியை மேற்கொண்டார்கள்.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 6 | அடுத்தபகுதி – 8

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...