இன்னும் 6 நாளில்.. வங்கி கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…
தமிழ்நாட்டில் வழங்கப்பட உள்ள ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.
இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் ஆம் தேதி முதல் 14ஆம் தேதி 5 வரை நடைபெற்றது. இதுவரை ஒரு கோடியே 75 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விண்ணப்பப் பதிவு முன்னேற்றம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்கள்.
ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் முதல் மாத பணம் எப்போது வங்கி கணக்கில் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். திட்டம் தொடங்கப்பட்டு அதிகபட்சம் 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ம் தேதி முதல் மாத தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். நேரடியாக வங்கி கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 5ம் தேதிக்குள் இதுவரை விண்ணப்பம் செய்த எல்லோருக்கும் விண்ணப்பங்களை இறுதி செய்து, 1 கோடி பயனர்களை தேர்வு செய்யும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்து இருந்தது
அதன்படி செப்டம்பர் 5ம் தேதிக்கு இந்த திட்டத்திற்கு தேர்வானவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு மெசேஜ் மூலம் தகவல் அளிக்கப்பட்டுவிட்டது. மெசேஜ் மூலம் இவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து ஒவ்வொருவராக பணம் பெற தொடங்குவார்கள். 1.70 கோடி பேர் விண்ணப்பம் செய்த நிலையில் 1.30 கோடி பேருக்கு பணம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கான பணம் இன்னும் 6 நாட்களில் கொடுக்கப்படும். இதற்காக விழா எடுத்து பணம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.