கே.ஜி.எப். -திரை விமர்சனம்
படப்பிடிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து நான்காண்டுகள் இடைவெளியுடன் வெளியாகி யிருக்கும் ஒரு படம் நம்மைத் திருப்திப்படுத்து வதற்கு மேலாகக் குதூகலப்படுத்தி இருக்கிறது என்றால் அந்தப் படத்திற்கு மிகப் பெரிய உழைப்பு இருந்திருக்க வேண்டும். அப்படியொரு கடின உழைப்பைக் கொடுத்திருக்கும் படம் ‘கே.ஜி.எஃப்’. இதுவரை ரூ.500 கோடி வசூல் செய் திருக்கிறது. தயாரிப்பாளர் ரூ.100 கோடி கொடுத்த சம்பளத்தை வாங்காமல் கதாநாய கன் யாஷ் நடித்துக் கொடுத்திருக்கிறார். வசூ லில் பீஸ்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன் னேறிக் கொண்டிருக்கும் கே.ஜி.எப்பைப் பார்த்து வடநாட்டு ஹீரோக்களே மிரள்கிறார்களாம்.
ரொம்ப அதிகமான பில்ட்-அப்களோடு எடுக்கப் பட்டு ரசிகர்களைக் கவர்ந்த முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்தையும் அதே ஹைப் புடன்தான் தொடர வேண்டும். சிறிது தவறினா லும் படத்தின் ஜீவனே கெட்டுவிடும் என்பதை நன்கு உணர்ந்து திறம்பட செயலாற்றிருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல்.
ராக்கி பாய் கதாபாத்திரத்தில் யாஷ். நாயகனாக முதல் பாகத்தில் உழைத்ததைவிட இரண்டாம் பாகத்தில் இன்னும் அதிகமாக உழைத்திருக் கிறார்.
மின்விசிறி நின்றதும் ‘ராணி மாதிரி பாத்துக் குறேன் சொன்னா மட்டும் பத்தாது’என நாயகி கூறும் காட்சிகளில் காதலிக்காக ஹெலிகாப்ட ரைப் பறக்கவைத்து ஆச்சரியப்படுத்தும் காட்சி களாகட்டும் நவீன துப்பாக்கியைப் பயன்படுத்தி சல்லி சல்லியாக காவல் நிலையத்தை தரை மட்டம் ஆக்கும் காட்சிகளாகட்டும் கொலை வெறியோடு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே புகுந்து வில்லனை சுட்டு வீழ்த்தும் காட்சிகளா கட்டும் ராக்கி பாயின் ருத்ர தாண்டவத்தை அனைவரும் ரசிக்கும்படி சிறப்பான ஒளிப்பதி வின் மூலம் காட்சிப்படுத்தி ரசிகர்களைப் படத் தோடு ஒன்ற வைத்திருப்பார் ஒளிப்பதிவாளர் புவன் கௌடா.
படத்தின் பெரும்பாலான இருள் சூழ்ந்த காட்சி களில் நெருப்பை மட்டுமே ஒளியாக்கி விருந்து படைத்திருக்கிறார். ஒட்டுமொத்த தொழில்நுட்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பினால் ரசிகர்களுக்குத் திரையில் ஒரு ‘விஷுவல் ட்ரீட் டை’க் கொடுத்திருக்கிறார்கள்.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தி லும் பன்ச் வசனங்களை எனர்ஜி குறையாமல் அப்படியே தமிழ் டப்பிங்கில் கொண்டு வந்திருக் கிறார் அசோக்.
விறுவிறுப்பான திரைக்கதை, எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் லாஜிக் மறந்து நம்மை முழு படத்தையும் சிறிதும் சலிப்பின்றி ரசிக்க வைத் திருக்கிறார்கள்.
மாஸ் என்டர்டெயின்ட்மென்ட் சினிமாவாக ரசி கர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது கே.ஜி.எஃப்-1
பிரம்மாண்டம், பெரிய பட்ஜெட், டப்பிங் என்ப தையும் தாண்டி கதையாகவே ஒரு பான் இந்தி யன் சினிமாவாக நம்மைக் கவர்கிறது இப்போது வெளியாகியுள்ள ‘கே.ஜி.எஃப்-2’.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத் தில் ரசிகர்களை திருப்திப் படுத்துவது என்பது சவாலான காரியம். ஆனால் அந்தக் காரியத் தைச் சிறப்பாகவும் இரட்டிப்பாகவும் செய்து அசத்திருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல்.