உலகப் பாரம்பரிய தினம்

 உலகப் பாரம்பரிய தினம்

இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங் களைப் போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கவும் ஆண்டு தோறும் ஏப்ரல் 18ல் உலகப் பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.

உலகம், முழுவதும் உலகப் பாரம்பரிய தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம், சுற்றுலா பயணிகள், பொது மக்களிடையே தங்க ளது சமூக கலாச்சார பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களைப் பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ள வும் தூண்டுகிறது.

யுனெஸ்கோ நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தொல்லியல், பாரம்பரி யம் சார்ந்த விழிப்புணர்வுக்காக ஏப்ரல் 18 உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடுகிறது.

2022க்கான இத்தினத்தின் முழக்கமாக, “பாரம்பரியமும் காலநிலையும்” என்பது உருவாக்கப்பட்டுள்ளது. கோயில்கள் நம் பண்பாட்டின் அடையாளங் கள். அவற்றின் சிறப்புகளை அறிந்து அவற்றைப் பாதுக்காப்போம்

உலகப் பாராம்பரிய தினத்தை முன்னிட்டு, புராதன சின்னங்களைப் பார்க்க இலவசம் என அறிவித்திருந்ததால், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

காலை 7 மணி முதலே இயற்கை காற்றை சுவாசித்தபடி புராதனச் சின்னங் களைப் பார்த்து ரசித்தனர். அங்குள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில், புலிக் குகை உள்ளிட்ட சிற்பங்களைப் பார்வையிட்டு அதன் முன்பு புகைப்படங்களும், செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

சிலர், குடும்பம் குடும்பமாக வருகை தந்து, தாங்கள் கொண்டு வந்த உணவைப் பரிமாறி மகிழ்ந்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள் ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இன்று காலை முதலே வர தொடங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பாரம்பரியச் சிறப்புள்ள சில கோயில்கள் பற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு கூறிய தாவது:
“சாயல்குடிகைலாசநாதர் கோயில் லிங்கம் சதுர வடிவ ஆவுடையாருடன் உள்ளது. இங்கு முற்காலப் பாண்டிய மன்னன் மாறன் சடையனின் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிகப் பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ள கோயில் இதுதான்.இதன் விமானம் சதுரவடிவில் சுத்த நாகரமாகவும், கருவறையின் மேல் எழும் சுவரும், உள்திருச்சுற்றின் சுவரும் மேலே செல்லும்போது ஒன்றாகிவிடும். இத்தகைய அமைப்பு கொண்ட விமா னத்தை சாந்தார விமானம்’ என்பர். இவ்வமைப்பு காஞ்சி கைலாசநாதர், தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களில் உள்ளது.

இவ்வூர் சிவன், கல்வெட்டுகளில் திருமதிசடையீஸ்வரமுடைய நாயனார் எனப்படுகிறார். லிங்கம் வட்டவடிவ ஆவுடையாருடனும், விமானம் மூன்று தளங்களுடனும் உள்ளது. திருக்கானக்பேர்க் கூற்றம் எனும் நாட்டுப்பிரி வில் இருந்த இவ்வூர் கல்வெட்டுகளில் அவிகாரசுந்தரநல்லூர், அவிதாய சுந்தரநல்லூர் எனப்படுகிறது.

மனிதர்களை, கோயில் பணி செய்வதற்காக வணிகர்கள் விலைக்கு வாங்கிக் கொடுத்து உள்ளதை இவ்வூர் கல்வெட்டு சொல்கிறது. கி.பி.1321ம் ஆண்டு பராக்கிரமபாண்டியன் கல்வெட்டு அரும்பொற்கூற்றத்து அமரமுக நல்லூரைச் சேர்ந்த நால்வர், கோயில் திருக்காமக்கோட்ட நாச்சியாருக்கு தேவதானமாகக் கொடுக்கப்பட்ட ஊரில் குடியிருந்து திருப்பணி செய்ய இடைக்குடி மக்களாகிய ஆவிப்பெரியான், ஆலிம்மன் சின்னர் ஆகிய இருவ ரையும் விற்றுள்ளனர். இதற்குரிய பணத்தை திருத்தேர்வளையைச் சேர்ந்த வணக்குச் செட்டியார் கொடுத்துள்ளார்.

முதலாம் ராஜேந்திர சோழன் மலேசியாவில் உள்ள கிடாரத்தை வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமாக இவ்வூருக்கு கிடாரம் கொண்ட சோழபுரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்வூரில் உள்ள திருவனந் தீஸ்வரர் சிவன் கோயிலில் பிற்காலப் பாண்டியரின் 9 கல்வெட்டுகள் உள்ளன. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் நான்காம் ஆட்சி யாண்டு தேவிபட்டினம் கல்வெட்டு, இவ்வூரை கிடாரங்கொண்ட சோழபுரம் என்கிறது. இவ்வூரிலுள்ள அவனது 5ம் ஆட்சியாண்டு கல்வெட்டு கிடாரம் கொண்டபுரம் என்கிறது. கோயில் விமானத்தில் கருவறை உள்ள தளம் போன்ற அமைப்பில் கருவறை மேல் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை பிரதி தளம் என்பர். தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களிலும் இந்த அமைப்பு உள்ளது.கள்ளிக்குடிதொண்டி அருகே கள்ளிக்குடியில் உத்தமபாண்டீஸ்வரர் எனும் ஒரு சிவன் கோயிலும், சீனிவாசப்பெருமாள் என்ற திருமால் கோயிலும் உள்ளன. அரும்பொற் கூற்றத்து கள்ளிக்குடி’ என கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.
சிவன் கோயில் கருவறையின் பின்பகுதி இடிந்துள்ளது. லிங்கம் சதுரவடிவ ஆவுடையாருடன் உள்ளது. கருவறை மட்டும் உள்ள ஒரு சிறிய கோயிலில் சீனிவாசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்றநிலையில் உள்ளார். இதன் நுழைவுவாயிலில் சீவல்லத்தேவர் எனும் கி.பி.16-ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டு உள்ளது.

கள்ளிக்குடி தீக்கொல்லர் சொக்கர் ஆண்டார் இக்கோயில் எதிரிலுள்ள குளத்தை தானமாக வெட்டிக் கொடுத்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு கோயில்களுக்கு தனித்தனி சிறப்புகள் உள்ளன. பாரம்பரியம் வரலாற்றை பறைசாற்றும் வழிபாட்டு தளங்களை பாதுகாத்து, பழமைமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்பதே ஊர் மக்களின் கோரிக்கையாக உள்ளது,’ என்றார் அவர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...