“ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை, கவுரவுமும் இல்லை” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு எதுவாக அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சரியாக 7 மணிக்கு தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணி முதலே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் தங்களது வாக்கினை செலுத்திவருகின்றனர். அந்த வகையில், நடிகர் அஜித் குமார், பா சிதம்பரம், எடப்பாடி பழனிசாமி, பொன் ராதாகிருஷ்னன், சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பலர் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை ஸ்டெலா்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.
வாக்களிக்க செல்வதற்கு முன் செய்தியர்களை சந்தித்த ரஜினிகாந்த், ” வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை, கவுரவுமும் இல்லை” என்று கூறினார்.