“வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்” – சத்யபிரத சாகு பேட்டி..!

 “வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்” – சத்யபிரத சாகு பேட்டி..!

இளைஞர்கள் ஆர்வமாக வாக்களிக்க வருவதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று நோக்கும் இந்திய மக்களவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.  21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

தமிழ்நாடு,  புதுச்சேரி உள்பட 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காளை 7 மணிக்கு தொடங்கியது.  தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு 68, 321 வாக்குச்சாவடிகளுக்கு அமைக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 10. 92 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில், நெற்குன்றம், MR மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில்,  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு  தனது வாக்கினை பதிவு செய்தார்.  அதன் பின்னர், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

“அனைத்து இடங்களிலும் நல்லபடியாக வாக்கு பதிவு நடைபெறுகிறது.  3,4 இடங்களில் வாக்கு பதிவு செய்யும் இயந்திரம் பழுது ஏற்பட்டது.  ஆனால், அவையும் சரி செய்யப்பட்டது.
மிக பதற்றமான மற்றும் மிக மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோதனை செய்து வருகின்றனர்.  மேலும், அப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இளைஞர்கள்,  புது வாக்காளர்கள் நிறைய ஆர்வமாக வருகிறார்கள்.  வாக்கு பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வாக்காளர் அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் வாக்கு உண்டு.  வாக்குச்சாவடிகள் முன்பின் இருக்கலாம்.  தேர்தல் செயலியில் பார்த்தால் தங்களுக்கு எந்த வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிய வரும்”

இவ்வாறு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...