மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 4 | லதா சரவணன்

 மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 4 | லதா சரவணன்

நாலாவது வி​ளையாட்டு

விளையாட்டுகள் நம்மை உற்சாகப்படுத்தும் என்பது நூறு சதவிகித உண்மையே ! ஆனால் நடைமுறையினைக் கூட வெகு அழகாக சொல்லப்படும் முறையில் விளையாட்டுகள் இருந்திருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடியுமா ?!

இதோ அப்படிப் பட்ட விளையாட்டுகளை நமக்கு சொல்ல வருகிறார்கள் நம் வாசுவும், மாலினியும்….

வண்ணான் பொதி…

உதயகுமார் தயாரித்த சின்னகவுண்டர் படம் பார்த்திருப்போம். ஊருக்கே நியாயம் சொல்லும் சின்னகவுண்டர் மனம் சோர்ந்து போயிருக்கும் நேரத்தில் அவருக்கு ஆறுதல் சொல்வதைப் போல ஒரு வண்ணான் அவர்களின் கேரக்டர் அமைந்திருக்கும். செந்திலும், கவுண்டமணியும் அந்த கேரக்டரை வெகு அழகா செய்திருப்பார்கள்.

மாலினி என்ன இன்ட்ரோ எல்லாம் பலமா இருக்கே நம்ம இரண்டு பேருக்கும் ! வா வா இத்தனை பேசினப்பிறகு சும்மாயிருந்தா நம்ம மரியாதை என்னாகிறது.

என்ன வேலை ?!

வண்ணான் வேலை…..! ஒவ்வொரு நாள் காலையிலும் இவங்க இல்லாம நாம வெள்ளையும் சொள்ளையுமா போக முடியாதே ?! நமக்கு கீழே வேலை பார்க்கிறே எல்லாத்தையும், மட்டமா நினைக்கணுங்கிற ஒரு விதியிருந்தது. அதாவது நகர்ப்புறங்களில் இம்மாதிரி வித்தியாசங்கள் பார்க்கப்படலைன்னாலும் கிராமப்புறங்களில் பார்க்கப்பட்டு இருந்தது என்னவோ உண்மைதான். ஒரு பெண் பிள்ளை திரண்டு வரும் போது அவங்களுக்கு சாங்கியம் செய்ய இந்த வண்ணான் துணியைத்தான் வாங்கு வாங்க.

அப்படியொரு தொழில் முறையைக் கூட விளையாட்டைப் போல கையாண்டு இருக்கிறாங்க அந்தகால குழந்தைங்க. ஊர்மக்களின் துணிகளைத் துவைத்துத் தரும் தொழிலாளி வண்ணான். அவர்களின் செயல்பாடுகள்தான் வண்ணான் தாழி

ஊர்துணிகளை மூட்டையாகக் கட்டித் தன் தோளின் பின்புறம் போட்டுக் கொண்டு சுமந்து செல்வான். வண்ணா பொதி விளையாடும் சிறுவர் வண்ணானைப் போலத் தன் சட்டைத் துணியைக் கழற்றிச் ஒரு மூட்டையைச் சுமப்பார்கள். விளையாடும் அனைவரும் பொதி சுமப்பவரை ஆளுக்கொரு தட்டு தட்டுவர். மூட்டைத் தட்டிவிட முயற்சி செய்து தட்டிவிட்டால், சுமந்தவர் பிறரைத் தொடுவார். அப்படி தொடப்பட்டவர் அவுட். அவரே பொதி சுமக்க வேண்டும்.

கீழே தட்டிவிடப்பட்ட மூட்டையை மேலும் தட்டிவிட்டால் அந்த துணிகளை மீண்டும் தொட்டுவிட்டுத்தான பிறரைத் தொடவேண்டும் என்பது ஆட்டத்தில் வகுத்துக் கொள்ளப்படும் விதி. இந்த விளையாட்டில் ஒருவரை தொடவிடாமல் மற்றவர் உதவி செய்வது உண்டு.

நல்லாயிருக்கே இந்த மாதிரி நான் கூட நிறைய விளையாட்டு பார்த்திருக்கேன் வாசு.

என்ன விளையாட்டு ?

கிராமத்திலே உப்பு புளி இதெல்லாம் விப்பாங்களே அந்த மாதிரி ஏதாவது ஒரு குழந்தையைத் தூக்கிட்டு உப்பு வாங்கலையோ உப்புன்னு ஒருத்தர் போக பணம் கொடுத்து அளவு கேட்டு வாங்குவது ஒரு வகை. என்ன நான் சொல்றது சரிதானே ?!

ம். மாலினி சொன்னா அதுக்கு அப்பீல் உண்டா, அது உப்புக்கோடுன்னு ஒரு விளையாட்டில் இருந்து மருவி வந்தது. மாலினி நான் உனக்கு ஒரு சங்ககால விளையாட்டு சொல்லட்டுமா ?

சொல்லேன் கேட்போம்.

கானப்பாதிரி கருந்தகட்டு ஒள்வீ

வேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச்

சில் ஐங் கூந்தல் அழுத்தி மெல் இணர்த்

தேம்பாய் மராஅம் அடைச்சி வான்கோல்

இயங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச்

சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி —

என்ன வாசு ஏதாவது தமிழ் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளப் போறீயா ? விளையாட்டுக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் ?

என் அழகு ஏஞ்சலே என்ன இப்படியொரு கேள்வியைக் கேட்டுட்டே ? இது குறுந்தொகை பாட்டு…. அர்த்தம் சொல்றேன் கேளு.

இதற்கு பெயர் எழில்விளையாட்டு, அழகு என்ற வார்த்தையைத் தக்க வைக்க நாம எவ்வளவோ செலவு செய்யறோம் உதாரணத்துக்கு நீ மாசம் ஒருமுறை அழகு நிலையங்களில் செலவழிக்கிறியே அதைப் போலத்தான் அந்த கால அரண்மணைகளில் எல்லாம் அந்தப்புரன்னு பெண்கள் பகுதி இருக்கும். அங்கே இளவரசி, ராணி என தங்கள் தோழிகளுடன் அநேகம் விளையாடுவார்கள். அவற்றில் ஒன்றுதான் இந்த எழில் விளையாட்டு.

தங்களில் யார் அழகு என்ற போட்டி வைத்து மதிப்பிடுவார்கள். இப்போதை ராம்ப் வாக் எல்லாம் இருக்கே அந்தமாதிரிதான். இயற்கையில் அழகு மிளிரும் பொருட்களால் தங்களை அலங்கரித்துக்கொண்டு வளையல்கள் குலுங்க கைகளை வீசிக்கொண்டும் சிலம்பும் தண்டையும் ஒலிக்க வண்ண வண்ண மலர்களால் கூந்தலை அலங்கரித்து போட்டியிடுவார்களாம். அதைத்தான் குறுந்தொகையின் இந்த வரிகள் விளக்கியிருக்கிறது.

எண்ணுதல் விளையாட்டு என்ற சங்கப் பாடல் விளையாட்டு குறிப்புகளை அடுத்த அத்தியாத்தில் சொல்கிறேன். இப்போ நடையைக் கட்டு….

(- தொடரும்…)

முந்தையபகுதி – 4 | அடுத்தபகுதி – 5

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...