மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 3 | லதா சரவணன்

 மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 3 | லதா சரவணன்

முத்தான மூன்றாவது வி​ளையாட்டு

வாசு சுவரில் கருப்பு வண்ணத்தை அடித்துக்கொண்டு நான்கு மூலை ஓரங்களில் பச்சைவண்ணத்தைக் குழைத்துக் கொண்டு இருந்தான். ஏய் என்ன பண்றே ?

ப்ளாக்போர்டு

அடப்பாவி நீ இன்னமும் சின்னப்பையனாவே இருக்கியே எப்போதான் மாறப்போறே ? லூசு நாம கல்லூரி மாணவர்கள் ஸ்கூல் பிள்ளைங்கள் இல்லை, அதிலும் இப்போயெல்லாம் அரசு பள்ளிகளில் கூட இம்மாதிரி கரும்பலகைகளை பயன்படுத்துவது கிடையாது, மானிட்டர்ஸ்தான் நீ என்னடான்னா இன்னும் சாக்பீஸ் வாங்கிவைச்சிட்டியா ? அவனின் சட்டைக்குள் துழாவினாள்.

வெயிட் சாக்பீஸ்க்கு வெண்கட்டிகள்ன்னு ஒரு பெயர் கால்சியம் சல்பேட்டு என்னும் வேதியியல் சேர்வையில் செய்யப்படும் குச்சிகள், கரும்பலைகள் திட்டம் 1986ல் தேசிய கல்விக்கொள்கையின் போது கொண்டு வரப்பட்டது .

டேய் உனக்கு ஏதும் மறை கழண்டு போயிடலையே ? இப்போ எதுக்கு சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுறே ?

எல்லாம் உனக்காகத்தான். செய்யவன திருந்தச் செய்னு ஒரு பழமொழி உண்டு உனக்குத் தெரியுமா மாலி, இப்போ நம்ம பார்க்கப் போற விளையாட்டுக்கு மூன்று பெயர்கள் உண்டு. அதோட வரைபடத்தோட விளக்கத்தான் இந்த போர்ட்டை உருவாக்கினேன்.

கிளித்தட்டு, தண்ணீர் புரி, உப்பு விளையாட்டு

ஏன்டா ஏதோ நிறைய புக்படிப்பிடியேன்னு கேட்டா ரொம்பத்தான் குழப்பறே கிளித்தட்டு கிழிக்காத தட்டுன்னு அடுத்தது என்ன தண்ணீர் பூரியா நக்கலாப் போச்சுல்லே உனக்கு

எப்பப்பாரு சண்டைக்கோழி மாதிரி சிலுப்பாதே மாலி தண்ணீர் பூரியில்லை தண்ணீர்புரி மண்டு.

இரு பெயர்காரணம் சொல்றேன். அதுக்கு முன்னாடி குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலைன்னு படிச்சிருக்கியே இந்த மரமண்டைக்கு நினைவு இருக்கா ?

இருக்கு இருக்கு அதுக்கும் நீ இப்போ பேசறதுக்கும் என்ன தொடர்பு எனக்கு தெரியாம விவசாயம் ஏதாவது பண்ணப்போறீயா

குறிஞ்சி நிலத்தில் தட்டு என்பது விவசாய நிலத்தில் அமைக்கப்படும் பாத்தியைக் குறிக்கும் அதில் விளைந்த கதிர்களைத் தின்ன வரும் கிளிகளைத் தட்டி ஓட்டுவது போன்றதால் இதற்கு கிளித்தட்டு என்று பெயர் வந்தது.

ஏய் இது பழைய முருகர் படத்தில் வர்ற சீன் இல்லை அவள் முறைப்பை பொருட்படுத்தாது தண்ணீர்புரிக்கு விளக்கம் சொன்னான் வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவதைப் போல இந்த விளையாட்டு இருப்பதால் இதை மருதநில மக்கள் தண்ணீர்புரி என்றார்கள்

கடல்நீர் உப்புத்தயாரிக்க உப்புப் பாத்தியில் பாய்வதைப் போல இருப்பதால் நெய்தல் நில மக்கள் இதனை உப்பு விளையாட்டு என்றனர்

அதெப்படி ஒரே விளையாட்டு இப்படி மாறுபடும்.

அதற்குத்தான் இந்த வரைபடம் போட்டு இருக்கிறேன் மாலினி. கிளித்தட்டு அல்லது தாச்சி என்ற இந்த விளையாட்டு இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு அறியப்படுவது. உடலுக்கு நல்ல பயனும் தரும்

இந்த வரைப்படம் போலத்தான் நாம் கோடுகள் வரைந்து கொள்ளவேண்டும் குழு ஒன்றிற்கு மூன்று உறுப்பினர்களாவது இருந்தால்தான் விளையாட்டு சுவாரஸ்யமாகும்.

இதுக்கும் டாஸ் இருக்கா

ஏன் இல்லாம ? டாஸில் வென்றவர்கள் உள்புகுவார்கள் தோற்றவர்கள் வழி மறிப்பனர்.

கபடி மாதிரியா ?

ம்கூம் அது ஒரு கோட்டைத் தாண்ட முயற்சிப்பது ?! விவசாயிகளின் ஒரு கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பது கிளித்தட்டு, நெல் விதைத்த காலங்களில் வயக்காட்டுப் பாத்தியில் நெல்விதையைப் பொறுக்க வரும் கிளிகளை தடுத்து அங்குமிங்கும் வரப்பில் ஓடி வயலைக் காப்பான்

காப்பான் சூரியா படம்தானே இன்னும் ரிலீஸாகலையே ? வாசு அவளைக் குட்டும் விதமாக கையைத் தூக்கிக்கொண்டு வரவும் அவள் அமைதியாக இருப்பதாய் சைகைப் புரிந்தாள்

இந்த விளையாட்டிற்குப் பெரியதாக மைதானம் எல்லாம் அமைக்கவேண்டியது இல்லை மிகவும் சிக்கனமான அனைவரும் மகிழக்கூடிய விளையாட்டு சிலர் ஆடும்போது ஏதாவது உருபோட்டு நாட்டுப்புற பாடல்களை பாடி கிளியைத் துரத்துவதைப் போல நடிப்பர். ஓடியாடி விளையாடுவதால் நாளச் சுரப்பிகள் வியர்வை பெருக்கெடுக்கச் செய்து உடற்பயிற்சி செய்ததைப் போல ஆகிவிடும்.

இப்போயெல்லாம் யார் உடற்பயிற்சி செய்றாங்க, அதிலும் வயிற்றைக் குறைக்கிறேன் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கிறேன்னு ஒரு பெல்ட்டைக் கொடுத்துட்டு டிவி பார்க்கும்போது, சமைக்கும் போது போட்டுக்கோன்னு நம்மோட பிசிகல் ஆக்டிவிடிஸையே குறைச்சிடறாங்க நானும் இந்த விளையாட்டை எங்கள் கல்லூரித்தோழிகளுடன் விளையாடப்போறேன் வழிமுறைகளைச் சொல்லு வாசு.

புகுதல் என்பது கிளி என்பவரைக் குறிக்கும் அவர் ஒருமுறை கிளி என்று சொல்லி களத்தில் முன்னேறுவார் எதிரணியினர் காத்தல் வேலையைச் செய்து அவர்களை முன்னேற விடாமல் தடுப்பார்கள். கையால் தொடாது அடி என பலத்த சத்தம் போட்டு தங்கள் தடுப்பை காட்டுவர்கள்.

தப்பித்துவிட்டேன் பார் என்று ஏமாற்றி நகருவார்கள் இப்படி நிறைய சுவாரஸ்யங்களைக் கொண்டது.

எல்லைக்குச் சென்றவர்கள் பழம் என்று அழைக்கப்படுவர். மீண்டும் புகுந்த எல்லைக்கே சென்றால் தான் அந்த அணிக்கு ஒரு புள்ளி அதாவது ஒரு பாயிண்ட் கிடைக்கும். ஆனால் மீண்டும் வரும்போது பழம் என்பவர் காய் உள்ள பெட்டிக்கு போக முடியாது கிளிபூட்டு என்று செயல்முறை தடையொன்றும் உள்ளது.

அப்படின்னா ?

அதாவது கிளி என்பவர் கோல் கீப்பர், நீ கூட அடிக்கடி அட்டாக் சொல்லி அசையாமல் நிற்கவைப்பாயே அதுதான் கிளிப்பூட்டு குட்டிப்பிள்ளைகள் இப்படி தாண்டும் போது நான் உனக்க உப்பு தர்றேன் நீ தடு பார்க்கலாம் என்று நகைச்சுவையாக விளையாடுவார்களாம்.

இந்த முறை உங்கள் கல்லூரி வேண்டாம் நம் வீட்டு மொட்டை மாடியிலே விளையாடலாம் உன் சிநேகிதிகளை அழைத்துவாயேன் என்றதுதான் தாமதம் அடுத்த நொடி வாசுவின் காதைப் பிடித்து திருகினாள் மாலினி.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 2 | அடுத்தபகுதி – 4

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...