எழுத்துக்கு மரியாதை

உரத்தசிந்தனைஎழுத்தாளர் சங்கம், நம் உரத்த சிந்தனை மாத இதழ் இணைந்து நடத்திய எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சி நேற்று  15.3.26 அன்று ஞாயிறு  மாலை  மிக சிறப்பாக நடை பெற்றது .

திருமதி. லலிதா மோகன் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து,

உரத்த சிந்தனையின் மக்கள் தொடர்பாளர்  மனோன்மணி வரவேற்புரை வழங்கினார்.

Savitri Foundation நிறுவனர் ஆடிட்டர்  கலைமாமணி திரு.J.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

தனது தலைமை உரையில் உரத்த சிந்தனை அமைப்பின் செயல்பாடுகளைப் பாராட்டியவர்,தாயின்  மேன்மையைப் போற்றும் விதமாக நாடகங்களை மேடையேற்றுவதைக் குறிப்பிட்டார்.

சென்னை ஸ்ரீராம் சமாஜத்தின் தலைவரும், உரத்தசிந்தனை அமைப்பின் துணைத் தலைவருமான  ஆடிட்டர் திரு.N. R. கிருஷ்ணமூர்த்தி உரத்தசிந்தனை சங்கத்தின்  தலைவர் திருமதி. பத்மினி  பட்டாபிராமன் எழுதிய இரண்டு நூல்களை,

வெளியிட்டார்.பின்னர் தனதுவாழ்த்துரையில் பல நாடுகளுக்கு பயணம் செய்வதை passion ஆகக் கொண்டுள்ளபட்டாபிராமன் தம்பதியைப் பாராட்டினார்.

“ஐரோப்பிய பயணத்தலங்கள்” நூலை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் பெற்றுக்கொண்டு , புத்தகம் பற்றிய சிறப்பான மதிப்புரையை வழங்கினார். நூலின் சுவாரசியமான பகுதிகளாக சிலவற்றைக் குறிப்பிட்டார்.

TAPAMS நிறுவனரும், எழுத்தாளருமான திரு. மேகநாதன், “கண்டங்கள் கடந்த மர்மங்கள்” நூலைப் பெற்றுக் கொண்டு நூல் குறித்த தனது சிறப்பான உரையை வழங்கினார்.தனது அனுபவங்களிலிருந்து ம் சில புதிய குறிப்புக்களைத் தந்தார்.

வாழ்த்துரை வழங்கிய Techno Products நிறுவனர், நடிகர் திரு. முரளி ஸ்ரீனிவாஸ் மேலும் பல நூல்களை எழுத வாழ்த்தியதோடு, வெண்பா போட்டிகளையும் பாராட்டினார்.

எழுத்தாளர், தொழிலதிபர் ,கல்வியாளர் திரு. அமுதா பாலகிருஷ்ணன் நம் உரத்த சிந்தனை மாத இதழில் பரிசு பெற்ற வெண்பாக்களிலிருந்து சிறந்த இரண்டைத் தேர்வு செய்து  வெண்பா வேந்தர் விருது மற்றும் ஊக்கத் தொகையை வழங்கினார்.

வெண்பாக்களைத் தேர்வு செய்த பண்ணை தமிழ்ச் சங்கம் அமைப்பாளர் கவிக்கோ திரு. துரை வசந்தராசன் விருது பெற்ற படைக்களப்  பாவலர் திரு. துரை மூர்த்தி, பாவலர் கருமலைத்தமிழாழன் இருவரையும்வாழ்த்தி, வெண்பா இலக்கணத்தையும் குறித்து கலகலப்பான உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் திரு.S.P.முத்துராமன், அனைவரையும் பாராட்டிச் சிறப்புச் செய்தார்.

தொடர்ந்து உரத்த சிந்தனை சார்பில் எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி, கவிஞர் தொலைப்பேசி மீரான், கல்வி வள்ளல் தெ.நா. முத்துக்குமாரசாமி

ஆகியோர் வழங்கிய Rs. 70,000 க்கான நலத்திட்ட உதவிகள், வழங்கப்பட்டன. விழாவில், திரு V. S. V ரமணன் , திரு N. C. மோகன்தாஸ் உட்பட பல பிரபல எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், உறுப்பினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை உரத்த சிந்தனைசெயலாளர் . உதயம்ராம் ,எழுத்தாளர் திருமதி. லதா சரவணன் தொய்வின்றி சிறப்பாக தொகுத்து வழங்கினர்.

பத்மினி பட்டாபிராமன் தனது ஏற்புரையுடன்  நன்றி தெரிவித்தார். இரவு விருந்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

செய்தித் தொகுப்பு

பத்மினி பட்டாபிராமன்

படங்கள் + காணொலித் தொகுப்பு

மு .மனோன்மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!